சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘வந்தா ராஜவா வருவேன்’. இதையடுத்து அவர் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்க இருப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் சிம்பு அப்படத்தில் இருந்து விலகினார். இதனையடுத்து சிம்பு தனது சொந்த தயாரிப்பில் மகா மாநாடு படத்தில் நடிக்க உள்ளதாக அறிவித்தார்.
இதற்கிடையே சிம்பு தாய்லாந்து சென்றார். இவர் சென்னை திரும்பியதும் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பார் என்று செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், நேற்று சென்னை திரும்பிய சிம்பு, கையில் பேக் உடன் ஸ்டைலாக நடந்து வரும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் தாடி, கூலிங் கிளாஸ், கறுப்பு டீ சர்ட், கறுப்பு ஜீன்ஸ், கறுப்பு ஷூ என கறுப்பு நிறத்தில் செம ஸ்டைலாக இருக்கிறார் சிம்பு.
இதையும் படிங்க: சிம்புவை கண்கலங்க வைத்த திரைப்படம்!