'விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' ஆகிய படங்களைத் தொடர்ந்து மீண்டும் சிம்பு - கெளதம் மேனன் கூட்டணி புதிய படத்தில் இணைகின்றனர்.
ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். சிம்புவின் 47ஆவது படமான இதற்கு 'வெந்து தணிந்தது காடு' எனப்பெயர் வைக்கப்பட்டுள்ளது. 15 கிலோ எடையை இப்படத்திற்காகக் குறைத்து சிம்பு அசத்தியிருக்கிறார்.
செப்டம்பர் மாதம் திருநெல்வேலியில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.
-
✈️ Off to #Mumbai for the next schedule of #VTK 👍🏻 pic.twitter.com/IUsjO0yHLM
— Silambarasan TR (@SilambarasanTR_) October 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">✈️ Off to #Mumbai for the next schedule of #VTK 👍🏻 pic.twitter.com/IUsjO0yHLM
— Silambarasan TR (@SilambarasanTR_) October 17, 2021✈️ Off to #Mumbai for the next schedule of #VTK 👍🏻 pic.twitter.com/IUsjO0yHLM
— Silambarasan TR (@SilambarasanTR_) October 17, 2021
இந்நிலையில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பிற்காக நடிகர் சிம்பு நேற்று (அக். 17) மும்பை சென்றுள்ளார். அவர் விமானத்தில் செல்லும்போது எடுத்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மும்பையில் சில நாள்கள் படப்பிடிப்பு முடிந்தவுடன், அடுத்த கட்ட படப்பிடிப்புக்காகப் படக்குழுவினர் சென்னை வர உள்ளனர்.
சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது படத்திற்கு திரையரங்குகள் குறைவாக கிடைத்ததால், மாநாடு படத்தின் ரிலீஸ் தேதியை அடுத்த மாதம் 25ஆம் தேதிக்குப் படக்குழு தள்ளிவைத்துள்ளனர்.
இதையும் படிங்க: என்னது மாநாடு படம் கொரியன் படத்தின் காப்பியா?