புற்றுநோயால் பாதிப்படைந்த குழந்தைகளை விழிப்புணர்வு மற்றும் நம்பிக்கை ஏற்படுத்த உலக ரோஜா தினம் சென்னை தேனாம்பேட்டை அப்போலோ (தனியார்) மருத்துவமனையில் இன்று கடைப்பிடிக்கபட்டது. இந்நிகழ்வில் திரைப்பட நடிகர் சிம்பு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி அவர்களுடன் நடனம் ஆடினார்.
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சிம்பு, “புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் நம்பிக்கை இழக்க வேண்டாம். நேர்மறையான எண்ணங்களுடன் எப்போதும் இருக்க வேண்டும் என்றார்.
மேலும் திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகள் குறித்த கேள்விக்கு, புகை பிடித்தால் மட்டுமே புற்றுநோய் வராது பல வகையில் புற்று நோய் வருகிறது என்று பதில் அளித்த அவரிடம், திரைப்படங்களில் போதைப் பொருள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உங்களுடைய நடவடிக்கை இருக்குமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் எதுவும் கூறாமல் செய்தியாளர் சந்திப்பினை முடித்துக்கொண்டார்.