ETV Bharat / sitara

’மாநாடு’ படத்துக்காக தொடர்ச்சியாக 24மணி நேரம் உழைத்த ’சிம்பு’ - simbu movie updates

’மாநாடு’ படத்துக்காக நடிகர் சிம்பு தொடர்ச்சியாக 24மணி நேரம் படப்பிடிப்பில் பங்கேற்றதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்சியாக 24மணி நேரம் ’மாநாடு’ படப்பிடிப்பில் கலந்து கொண்ட சிம்பு!

author img

By

Published : Mar 19, 2020, 12:41 PM IST

’வந்தா ராஜாவாதான் வருவன்’ படத்திற்கு பிறகு சிம்பு நடிப்பில் ஒரு திரைப்படம் கூட வெளியாகவில்லை. இதையடுத்து தற்போது வெங்கட் பிரபு இயக்கி வரும் ‘மாநாடு’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்தநிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வந்தது. தற்போது கரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்பு நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் படக்குழு சென்னை திரும்பியுள்ளது.

இந்நிலையில், ‘மாநாடு’ படக்குழு சென்னை திரும்புவதற்கு முன்பு ஒரு சில காட்சிகள் மட்டும் படமாக்கப்படாமல் இருந்துள்ளது. அதை முடித்து கொடுக்க வேண்டும் என்பதற்காக சிம்பு தொடர்ச்சியாக 24 மணி நேரம் படப்பிடிப்பில் பங்கேற்றதாக ‘மாநாடு’ படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். சிம்புவின் இந்த ஈடுபாடு அவரது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மேலும் விரைவில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: இரண்டு மாத குழந்தை புகைப்படத்தை வெளியிட்ட திவ்யா உன்னி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.