ETV Bharat / sitara

இனி இப்படியொரு இழப்பு வேண்டாம் - 'இந்தியன் 2' பட விபத்து குறித்து சிம்பு உருக்கம்! - மாநாடு படத்தில் சிம்பு

சென்னை: பணமோ, வார்த்தைகளோ உயரிழப்பை ஈடுசெய்துவிட முடியாது. இனி ஒருபோதும் இப்படியொரு இழப்பு வேண்டாம். தொழிலாளர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்குமான பாதுகாப்பை இன்னும் கவனமாக கையாளுவதை அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும் என்று கூறி, 'இந்தியன் 2' பட விபத்து குறித்து நடிகர் சிம்பு கூறியுள்ளார்.

Simbhu press release on Indian 2 set accident
Actor Simbhu
author img

By

Published : Feb 22, 2020, 12:27 PM IST

'இந்தியன் 2' பட விபத்து குறித்து இரங்கல் தெரிவித்து நடிகர் சிம்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: எமது சினிமா தொழிலாளர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும், குறிப்பாக சண்டைக் காட்சி நடிகர்களும் நூலிழையில் உயிர்தப்பியே தினம் தினம் வீடு திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.

ஒவ்வொரு தொழிலாளர்களையும் நான், எங்களை ஏற்றி வைக்கும் ஏணியாகப் பார்க்கிறேன். அவர்களின் வியர்வையில்தான் எங்களது உயரம் தீர்மானிக்கப்படுகிறது. அவர்கள் ஒவ்வொருவரையும் என் குடும்பமாகவே பார்க்கிறேன். 'இந்தியன் 2' படப்பிடிப்பில் நேர்ந்த விபத்து என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது.

எத்தனை கனவுகளோடு விபத்தில் சிக்கியவர்களின் சினிமா பயணம் ஆரம்பித்திருக்கும்? அவர்களின் குடும்பத்தின் கனவுகளும் சேர்ந்தே தொலைந்து போய்விட்டது என்பதை நினைத்துப் பார்க்கையில் கண்களில் நீர் முட்டிக்கொண்டு வருகிறது. இறந்துபோன தொழிலாளர்கள், உதவி இயக்குநர்களின் குடும்பத்துக்கு என் ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஈடுசெய்ய முடியாத இந்த இழப்பைத் தாங்கும் பலத்தைத் தர இறைவனை வேண்டுகிறேன். இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் விரைவில் நலமுடன் வீடு திரும்ப அந்த ஆண்டவன் துணை நிற்கட்டும். இனி ஒருபோதும் இப்படியொரு இழப்பு வேண்டாம்.

தொழிலாளர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்குமான பாதுகாப்பை இன்னும் கவனமாக கையாள வேண்டும் என்பதை அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும். பணமோ, வார்த்தைகளோ உயரிழப்பை ஈடுசெய்துவிட முடியாது. அதனால் பணியின்போது, ஒவ்வொருவரும் தங்கள் உயிரின் மீது கவனம் வைத்து பாதுகாப்பை உறுதிசெய்துகொண்டு வேலை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு நடிகர் சிம்பு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சிம்பு படத்தில் போலீஸாக ஸ்ரீகாந்த்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.