'பூவரசம் பீப்பி' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான படம் 'சில்லுக்கருப்பட்டி'. நான்கு வெவ்வேறு கதைகளை உள்ளடக்கிய ஆந்தாலஜி வகைப்படமான, இதில் சமுத்திரக்கனி, சுனேனா, மணிகண்டன், நிவேதிதா சதீஷ், லீலா சாம்சன், பேபி சாரா ஆகியோர் நடித்திருந்தனர்.
இப்படத்திற்கு ரசிகர்கள் மட்டுமின்றி திரைத்துறையைச் சேர்ந்த பலரும் பாராட்டு தெரிவித்தனர். இந்த நிலையில் இப்படம் வெளியாகி 50 நாட்களை கடந்துள்ள நிலையில், அதைக் கொண்டாடும் வகையில் இயக்குநர் ஹலிதா மற்றும் படக்குழுவை சூர்யா, ஜோதிகா நேரில் அழைத்து பாராட்டியுள்ளனர். இதைத் தொடர்ந்து கேக் வெட்டி அவர்கள் கொண்டாடியுள்ள புகைப்படத்தை இயக்குநர் ஹலிதா, தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
-
Suriya sir and Jyo ma’am invited our team home, appreciated all the technicians and actors.
— Halitha (@halithashameem) February 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Extremely kind of them to pour praises on the film and going speechless by their words, I just held their hands to express my gratitude.
They also gifted me a MacBook Pro. pic.twitter.com/KD1J5UwefA
">Suriya sir and Jyo ma’am invited our team home, appreciated all the technicians and actors.
— Halitha (@halithashameem) February 22, 2020
Extremely kind of them to pour praises on the film and going speechless by their words, I just held their hands to express my gratitude.
They also gifted me a MacBook Pro. pic.twitter.com/KD1J5UwefASuriya sir and Jyo ma’am invited our team home, appreciated all the technicians and actors.
— Halitha (@halithashameem) February 22, 2020
Extremely kind of them to pour praises on the film and going speechless by their words, I just held their hands to express my gratitude.
They also gifted me a MacBook Pro. pic.twitter.com/KD1J5UwefA
அதில், 'சூர்யாவும், ஜோதிகாவும் எங்கள் டீமை வீட்டுக்கு அழைத்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அவர்களின் பாராட்டால் நான் பேச்சற்றுப் போனேன். அவர்களின் கைகளைப் பிடித்துக்கொண்டு என் நன்றிகளைத் தெரிவித்தேன். எனக்கு அவர்கள் ஆப்பிள் மேக்புக்கை (New Apple MacBook Pro) பரிசளித்தனர்' என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதுதவிர ஹலிதாவின் மூன்றாவது படத்தை, சூர்யாவின் 2டி நிறுவனமும், ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காக்கிச் சட்டையில் மீசையை முறுக்கும் ரவிதேஜா.!