ETV Bharat / sitara

எங்கள் உலகம் மகிழ்ச்சி நிறைந்ததாக மாறியுள்ளது - நடிகை ஸ்ரேயா சரண் - பெண் குழந்தைக்கு தாயான ஸ்ரேயா

நடிகை ஸ்ரேயா சரண் பெண் குழந்தைக்கு தாயாகியுள்ளார்.

Shriya Saran
Shriya Saran
author img

By

Published : Oct 12, 2021, 3:10 PM IST

'உனக்கு 20 எனக்கு 18' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ரேயா சரண். பிறகு இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'சிவாஜி' படத்தில் கதாநாயகியாக நடித்துப் பிரபலமானார்.

தொடர்ந்து தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்துவந்த ஸ்ரேயா, 2018ஆம் ஆண்டு ரஷ்ய நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் ஆண்ட்ரோ கொஸ்சீவைத் திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்குப் பிறகு இந்த தம்பதி ஸ்பெயினில் உள்ள பார்சிலோனாவில் வசித்து வருகின்றனர்.

இவர் தற்போது ராஜெளலி இயக்கத்தில் உருவாகி வரும் 'ஆர்ஆர்ஆர்', விமலின் 'சண்டகாரி' போன்ற படங்களில் நடித்துள்ளார். இப்படங்கள் விரைவில் திரைக்கு வருகின்றன.

இந்நிலையில், ஸ்ரேயா - ஆண்ட்ரோ பெண் குழந்தைக்கு பெற்றோராகி உள்ளனர். இதுகுறித்து ஸ்ரேயா தனது சமூகவலைதளப்பக்கத்தில், " வணக்கம் மக்களே, எங்களுக்கு மிக மோசமான அதே நேரத்தில் மிக அழகான ஒரு ஊரடங்கு கிடைத்தது.

ஒட்டுமொத்த உலகமும் ஒருமிகப்பெரிய துன்பத்தை எதிர்கொண்ட நேரத்தில் எங்கள் ஒட்டுமொத்த உலகமும் ஒரு சாகசம் நிறைந்த, மகிழ்ச்சியான ஒரு உலகமாக மாறிவிட்டது. எங்கள் வாழ்க்கையில் ஒரு பெண் தேவதை கிடைத்ததன் மூலம் நாங்கள் ஆசிர்வதிக்கப்பட்டோம். கடவுளுக்கு நாங்கள் மிகவும் நன்றி கடன்பட்டுள்ளோம்” என ஸ்ரேயா பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவையடுத்து ஸ்ரேயாவிற்கு திரைப்பிரபலங்கள், ரசிகர் என பலரும் சமூகவலைதளங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: வைரலாகும் ஸ்ரேயாவின் பிகினி டான்ஸ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.