சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் சிவாங்கி. தனது குழந்தைத்தனமான சேட்டை மூலம் ஏராளமான ரசிகர்களை உருவாக்கி வைத்துள்ள இவர், சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் படத்தில் நடித்து வருகிறார்.
தற்போது, அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆர்டிகள் 15 பட ரீமேக்காக இப்படம் உருவாகிறது. மேலும், இந்த திரைப்படம் பொள்ளாச்சியைச் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.