ETV Bharat / sitara

நடிகர் நட்டியுடன் இணைந்த ஷில்பா மஞ்சுநாத்! - Shilpa Manjunath pairs with Natarajan

நடிகர் நட்டி நடிக்கும் சைக்கோ த்ரில்லர் படத்தில் நாயகியாக ஷில்பா மஞ்சுநாத் நடித்து வருகிறார்.

நட்டியுடன் இணைந்த ஷில்பா மஞ்சுநாத்
நட்டியுடன் இணைந்த ஷில்பா மஞ்சுநாத்
author img

By

Published : Aug 12, 2021, 1:31 PM IST

நடராஜன் சுப்பிரமணியம் (எ) நட்டி நடிக்கும் புதுப் படத்தை புதுமுக இயக்குநர் ஹாரூன் இயக்குகிறார். 'வேலன் புரொடக்ஷன்ஸ்' சார்பில் வி.எம். முனிவேலன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

சைக்கோ த்ரில்லராக உருவாகும் இப்படத்தில் நாயகியாக 'காளி', 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' ஆகிய படங்களில் நடித்த ஷில்பா மஞ்சுநாத் நடித்து வருகிறார்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் 'பிளாக் ஷீப்' நந்தினி, பாரதா நாயுடு, ப்ரீத்தி ஆகியோர் நடிக்கின்றனர்.

கார்த்திக் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்கிறார். நடிகர் நட்டி கடைசியாக ‘கர்ணன்’ படத்தில் கண்ணபிரான் கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இயக்குநர் சிவாவுக்கு பிறந்தநாள் - ரசிகர்கள் கொண்டாட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.