அட்லி - விஜய் கூட்டணியில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'பிகில்'. பெண்களின் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து வெளியான இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இதையடுத்து அட்லி இயக்கவுள்ள அடுத்த படம் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகாமலிருந்தது.
இந்நிலையில் இயக்குநர் அவர் அடுத்ததாக ஷாருக்கானை வைத்து ஒரு திரைப்படம் இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சங்கி (Sanki) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் நடிகை தீபிகா படுகோன் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
இவர்கள் ஏற்கனவே மூன்று திரைப்படங்களில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விரைவில் இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.