ETV Bharat / sitara

ட்விட்டரில் சூர்யா ராஜ்ஜியம்- குஷியில் ரசிகர்கள் - suriya latest movies

ட்விட்டரில் ஏழு மில்லியன் ஃபாலோயர்களை கடந்து நடிகர் சூர்யா சாதனை படைத்துள்ளார்.

சூர்யா
சூர்யா
author img

By

Published : Aug 24, 2021, 11:41 AM IST

தமிழ் திரைத்துறையுலகில் மாஸ் மன்னனாக வலம் வருபவர் நடிகர் சூர்யா. எந்தவித கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்காக முழுமையாகத் தன்னை தயார் செய்து நடித்து அசத்துவதில் வல்லவர்.

இவரது நடிப்பில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. அதுமட்டுமின்றி பல்வேறு விருது விழாக்களில் திரையிடப்பட்டு, ஏகப்பட்ட விருதுகளைக் குவித்து வருகிறது.

இந்நிலையில் சூர்யாவை ட்விட்டரில் ஏழு மில்லியன் நபர்கள் பின் தொடர்கின்றனர். இதன்மூலம் தென்னிந்திய நடிகர்களில் குறைந்த ஆண்டுகளில் அதிக ஃபாலோயர்களை பெற்றவர் என்ற சாதனையை அவர் பெற்றுள்ளார்.

ட்விட்டரில் சூர்யா ராஜ்ஜியம்
ட்விட்டரில் சூர்யா ராஜ்ஜியம்

ட்விட்டரில் 10 மில்லியன் ஃபாலோயர்களுடன் தனுஷ் முதல் இடத்திலும், சூர்யா இரண்டாவது இடத்திலும் உள்ளனர். நடிகர் சூர்யா தற்போது எதற்கும் துணிந்தவன், ஜெய்பீம், வாடிவாசல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: 10 ஆண்டு காதலியைக் கரம்பிடிக்கும் 'வலிமை' வில்லன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.