இந்தியா முழுவதும் கரோனா தொற்றுப்பரவல் மிக வேகமாகப் பரவி வருகிறது.
ஏற்கெனவே உருமாறிய கரோனா வைரஸான ஒமைக்ரான் மக்களை வெகுவாகப் பாதித்து வருகிறது. இதற்கிடையே தற்போது இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட ஒமைக்ரானில் இருந்து உருவான பிஏ - 2 எனும் புதிய கரோனா தொற்று உலக மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியாவில் தற்போது மூன்றாவது அலை தொடங்கிவிட்டதால், தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இருப்பினும், பல திரையுலகப் பிரபலங்கள் தொடர்ந்து தொற்று பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
நடிகைகள் மீனா, திரிஷா, லட்சுமி மஞ்சு, செரீன், கீர்த்தி சுரேஷ், நடிகர்கள் மகேஷ் பாபு, அருண் விஜய், சத்யராஜ், விஷ்ணு விஷால், ஜெயராமன், இயக்குநர் பிரியதர்ஷன், இசையமைப்பாளர் தமன் உள்ளிட்ட பலர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று குணமடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் இயக்குநர் செல்வராகவன் தனக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என இன்று (ஜன.23) தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதில், ' எனக்கு இன்று (ஜன.23) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 அல்லது 3 நாட்களில் என்னுடன் தொடர்பில் இருந்தோர் தயவுசெய்து நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று உங்கள் மருத்துவரிடம் கேட்டுக் கொள்ளவும்.
தயவுசெய்து கவனமுடன் இருங்கள். அனைவரும் முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்' எனப் பதிவிட்டுள்ளார்.
இதனால் திரையுலகப் பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
இதையும் படிங்க: நடிகர் ஜெயராமுக்கு கரோனா தொற்று உறுதி!