தற்போது கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை வரலாறுகள் அதிக அளவில் படமாக்கப்பட்டு வருகின்றன. கிரிக்கெட் வீரர்கள் தோனி, சச்சின், அசாருதின், கபில் தேவ் போன்றவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட்டுவரும் நிலையில், இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறும் தற்போது படமாக உருவாகவுள்ளது.
மூவி ட்ரெயின் மோஷன் பிக்ச்சர்ஸ், தர்மோஷன் பிக்சர்ஸ் சார்பில் தயாராகும் இந்தப் படத்தை இயக்குநர் ஸ்ரீபதி ரங்கசாமி இயக்குகிறார். இதில் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதற்கு பல்வேறு தரப்பில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. இதையடுத்து இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "விஜய் சேதுபதியின் இதயம் உலகத் தமிழர்கள்
விஜய் சேதுபதி நடிக்கும்
யாதும் ஊரே யாவரரும் கேளீர் திரைப்படம் அதற்கு சான்று.
ஈழத்தமிழர் உள்ளத்திற்கு அருமருந்து.
உள்ளங்கைக்கு முத்தம்.
மக்கள் செல்வா..
நீரே எங்கள்
தமிழ் சொத்து அய்யா
நமக்கெதற்கு மாத்தையா?
மாற்றய்யா?" எனத் தெரிவித்துள்ளார்.
-
விஜய் சேதுபதியின் இதயம் உலகத்தமிழர்கள் ❤️@VijaySethuOffl நடிக்கும்
— R.Seenu Ramasamy (@seenuramasamy) October 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
யாதும் ஊரே யாவரரும் கேளீர் திரைப்படம் அதற்கு சான்று.
ஈழத்தமிழர் உள்ளத்திற்கு அருமருந்து.
உள்ளங்கைக்கு முத்தம்.
மக்கள் செல்வா..
நீரே எங்கள்
தமிழ் சொத்து அய்யா
நமக்கெதற்கு மாத்தையா?
மாற்றய்யா?
🙏 🙏 🙏
">விஜய் சேதுபதியின் இதயம் உலகத்தமிழர்கள் ❤️@VijaySethuOffl நடிக்கும்
— R.Seenu Ramasamy (@seenuramasamy) October 10, 2020
யாதும் ஊரே யாவரரும் கேளீர் திரைப்படம் அதற்கு சான்று.
ஈழத்தமிழர் உள்ளத்திற்கு அருமருந்து.
உள்ளங்கைக்கு முத்தம்.
மக்கள் செல்வா..
நீரே எங்கள்
தமிழ் சொத்து அய்யா
நமக்கெதற்கு மாத்தையா?
மாற்றய்யா?
🙏 🙏 🙏விஜய் சேதுபதியின் இதயம் உலகத்தமிழர்கள் ❤️@VijaySethuOffl நடிக்கும்
— R.Seenu Ramasamy (@seenuramasamy) October 10, 2020
யாதும் ஊரே யாவரரும் கேளீர் திரைப்படம் அதற்கு சான்று.
ஈழத்தமிழர் உள்ளத்திற்கு அருமருந்து.
உள்ளங்கைக்கு முத்தம்.
மக்கள் செல்வா..
நீரே எங்கள்
தமிழ் சொத்து அய்யா
நமக்கெதற்கு மாத்தையா?
மாற்றய்யா?
🙏 🙏 🙏
முத்தையா முரளிதரனின் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஈழத்தமிழர்கள் சமூக வலைதளங்களில் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க... திருமணம் குறித்து வெளியான பதிவு - விளக்கமளித்த இயக்குநர் சீனு ராமசாமி!