ETV Bharat / sitara

நடிகை கடத்தல் வழக்கு: நடிகர் திலீப்பின் கோரிக்கை நிராகரிப்பு

டெல்லி: நடிகை கடத்தப்பட்ட வழக்கில் கடத்தலின்போது எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் வீடியோ மற்றும் அதனை எடுக்க பயன்படுத்திய ஃபோனையும் தங்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என்ற நடிகர் திலிப்பின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.

Actor Dileep
Actor Dileep
author img

By

Published : Nov 29, 2019, 1:01 PM IST

Updated : Nov 29, 2019, 2:25 PM IST

கடந்த 2017ஆம் ஆண்டு பிரபல மலையாள நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்யப்பட்டார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில் உள்ளிட்ட சிலரை கேரள காவல் துறை கைது செய்தது. இந்த வழக்கு விசாரணையில் இதன் பின்னணியில் பிரபல மலையாள நடிகர் திலீப் மூளையாக செயல்பட்டதாகக்கூறி அவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து ஜாமினில் அவர் விடுவிக்கப்பட்டார்.

இந்த வழக்கில், தான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க, நடிகை கடத்தலின் போது எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் வீடியோ மற்றும் அதனை எடுக்க பயன்படுத்திய ஃபோனையும் தங்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என திலீப் கேரள உயர் நீதிமன்றத்தை நாடினார். இதனை ஏற்க மறுப்பு தெரிவித்த நீதிமன்றம் திலீப்பின் கோரிக்கையை நிராகரித்தது.

இதை தொடர்ந்து திலீப் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி எ.எம்.கான்வில்கர் முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், வீடியோ உள்ளிட்ட ஆதாரங்களைக் கோரியிருந்த திலீப்பின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. மேலும், வீடியோ ஆதாரங்களை குற்றம்சாட்டப்பட்ட திலீப்பும், அவரது வழக்கறிஞரும் ஆய்வு செய்யலாம் என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட நடிகை, கடத்தல் தொடர்பான காணொலிகளை வழங்கினால் அதை திருட்டுத்தனமாக வெளியிட வாய்ப்பு உள்ளது என்றும், தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் கூறி உச்ச நீதிமன்றத்தை நாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க...

கடத்தல் தொடர்பான காணொலிகளை நடிகரிடம் வழங்க வேண்டாம் - நடிகை கோரிக்கை

Intro:Body:

SC rejects Actor Dileep's plea for copy of memory card in Malayalam actress sexual assault case

NewDelhi: In the Malayalam actress abduction and sexual assault case Supreme Court said actor Dileep will not get a copy of memory card containing video of alleged sexual assault. However court has allowed Dileep and his advocate to inspect the video subject to conditions securing privacy of the actress.  

Conclusion:
Last Updated : Nov 29, 2019, 2:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.