கரோனா வைரஸ் காரணமாக பல நாடுகள் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளன. இதனையடுத்து வளைகுடா நாடுகளான ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக அங்குள்ள திரையரங்குகள் அனைத்தையும் மூட உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அலுவலர்கள் கூறுகையில், பொதுச் சுகாதரத்தைப் பாதுகாப்பதற்கான முயற்சியில், துபாயில் உரிமம் பெற்ற திரையரங்கம், தீம் பார்க், கேளிக்கை விடுதி, உடற்பயிற்சி மையம், உள்ளிட்டவை மார்ச் இறுதிவரை மூடப்படுவதாகக் கூறினர்.
இதே போன்று சவுதியிலும் ரெஸ்டாரண்ட், கேளிக்கை விடுதி, திரையரங்கம் உள்ளிட்டவற்றையும் அந்நாட்டு அரசு மூட உத்தரவிட்டுள்ளது.