விறுவிறுப்பான ஆக்சன் திரில்லர் கதையை அடிப்படையாகக் கொண்டு தயாராகியுள்ள ’தீர்ப்புகள் விற்கப்படும்’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ் நடித்துள்ளார்.
தற்போது இப்படத்தின் டப்பிங் பணிகளும் நிறைவடைந்திருக்கின்றன. இதைத்தொடர்ந்து சத்யராஜ் தான் நடித்த காட்சிகள் அனைத்திற்கும் தொடர்ந்து, பன்னிரெண்டு மணி நேரம் டப்பிங் பேசி முடித்துள்ளார்.
இது குறித்து இயக்குநர் தீரன் கூறுகையில், ' நடிகர் சத்யராஜூடன் இணைந்து பணியாற்றி முடித்ததும் அவரது கடின உழைப்புக்கும், அர்ப்பணிப்புக்கும் நான் தீவிர ரசிகனாகிவிட்டேன். இதற்குக் காரணம் சினிமா மீது தொழில் பக்தி மட்டுமல்ல, கலையையும் நடிப்பையும் அவர் உணர்வுப்பூர்வமாக பின்பற்றும் முறையும்தான். அவரது அர்ப்பணிப்பு மிக்க நடிப்பு 'தீர்ப்புகள் விற்கப்படும்' படத்தின் மிகப் பெரிய பலமாக, படத்தைத் தாங்கி நிற்கும் தூணாக இருக்கும். படத்தின் டப்பிங் பணிகளையும் முழுமையாக முடித்து விட்டோம். சத்யராஜ் தனது டப்பிங் பணிகளை பன்னிரெண்டு மணி நேரத்தில் முடித்து, எங்களை ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்’ என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'நல்லது கொஞ்சம் லேட்டா தான் வரும்' - சமாளித்த ஆலியா