தமிழ்நாட்டில் கரோனா இரண்டாவது அலையால் பாதிக்கப்பட்டிருந்த திரையுலகம் தற்போது மீண்டும் தனது பழைய நிலைக்கு திரும்பி வருகிறது. இரண்டாவது அலைக்குப்பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்டவுடன், பத்துக்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகியுள்ளது.
அதில் விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன், ருத்ர தாண்டவம், சிவகுமாரின் சபதம் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களை திரையரங்குகளை நோக்கி வரவைத்தது. இதில் கடந்த சனிக்கிழமை (அக்.9) வெளியான சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இன்றுவரை திரையரங்கு நிறைந்த காட்சிகளுடன் வெற்றிகரமாக ஓடுகிறது.
இந்நிலையில் ஆயுத பூஜையை முன்னிட்டு சுந்தர்.சியின் அரண்மனை 3, சசிகுமாரின் ராஜவம்சம், அதர்வாவின் தள்ளிப்போகாதே ஆகிய படங்கள் வெளியாக இருந்தன.
ஆனால் டாக்டர் திரைப்படம் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடி வருவதாலும், அரண்மனை 3 திரைப்படம் ஏராளமான திரையரங்குகளைக் கைப்பற்றியதாலும் மற்ற இரண்டு படங்களுக்கு திரையரங்குகள் கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது.
அதனால் இந்த இரண்டு படங்களும் ரிலீஸ் தேதியை தள்ளிவைத்துள்ளது. இதில் சசிகுமாரின் ராஜவம்சம் சென்ற வாரமே வெளியாவதாக இருந்தநிலையில், அடுத்த வாரம் அல்லது சரியான திரையரங்கு செட்டப் கிடைத்தவுடன், படம் வெளியாகும் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: 'இன்ஷா அல்லாஹ்' மனிதநேயத்தைப் போதிக்கிறது - பாக்யராஜ் பாராட்டு