ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் சார்பில், ராஜா கதை நாயகனாக நடித்து, தயாரித்துள்ள படம் 'அருவா சண்டை'. இந்தப் படத்தில் சரண்யா பொன்வண்ணன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நாயகியாக மாளவிகா மேனன் நடித்துள்ளார்.
சமூகத்தில் நடக்கும் சாதிய படுகொலைகளை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படத்தை ஆதி ராஜன் இயக்கியுள்ளார். வைரமுத்து எழுதிய பாடல் வரிகளுக்கு தரண் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்திற்கு தணிக்கை குழுவினர் யூ சான்றிதழ் வழங்கியுள்ளனர். தற்போது இந்தப் படம் திரையரங்கு வெளியீட்டிற்காக தயாராகிவருகிறது.
சரண்யா பொன்வண்ணன் படத்தில் நடித்த அனுபவங்களை கூறுகையில், "சமீபத்தில் நான் கதை கேட்ட உடனே ஒப்புக் கொண்ட படம் என்றால் அது 'அருவா சண்டை' படம்தான்.
என்னை போன்ற குணச்சித்திர நடிகைகளுக்கு இதுபோன்ற படம் அமைவது மிகவும் அரிது, இது ஒரு சிறந்த கதைக்களம் கொண்ட சமூக அக்கறை உள்ள படமாக உருவாகி உள்ளது.
இந்தப் படத்திற்கு டப்பிங் பேசும்போது, நான் என்னை அறியாமலேயே கண் கலங்கினேன். அப்படியொரு மனம் உருகும் நெகிழ்ச்சியான கிளைமாக்ஸ் காட்சிகள் படத்தில் உள்ளன.
விஜய்சேதுபதியுடன் 'தென்மேற்குப் பருவக்காற்று' படத்தில் நடிக்கும்போது ஏற்பட்ட அனுவபவத்தை இந்தப் படத்தில் உணர்ந்தேன்.
இதிலும் நாயகன் ராஜா புதிது. ஆனால் நடிப்பில் அப்படி தெரியவில்லை, சிறப்பாக அந்த கதாபாத்திரத்திற்கு பொருந்தியிருந்தார்.
படத்தை தைரியமாக தயாரித்து, எனக்கு மகனாக, கதையின் நாயகனாக நடித்துள்ள ராஜா மேலும் பல சமூக சிந்தனையுள்ள படங்களை தயாரித்து நடிக்கவேண்டும்" என்று கூறினார்.
இந்தப் படம் குறித்து பாடலாசிரியர் வைரமுத்து கூறுகையில், "இன்றைக்கு இருக்கும் காலகட்டத்தில் இதுபோன்ற துடிப்பான இளைஞர்கள் சினிமா தயாரிக்க வருவது அதிசயம்தான்.
ஆனால் தம்பி ராஜா ஒரு கறுப்புத் தமிழன். அவர் தயாரித்து, கதை நாயகனாக வருவதில் எனக்குப் பெருமிதம். இந்தப் படத்தில் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக அமைந்துள்ளன. சமூகப்புரட்சி கொண்ட சாதியப் படுகொலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக படத்தை தயாரித்துள்ளார்" என்று கூறினார்.
டப்பிங்கில் கண்கலங்கிய சரண்யா பொன்வண்ணன் - பாடலாசிரியர் வைரமுத்து
சென்னை: 'தென்மேற்குப் பருவக்காற்று' படத்தில் நடிக்கும்போது ஏற்பட்ட அனுபவத்தை 'அருவா சண்டை' படத்தில் நடிக்கும்போது உணர்ந்ததாக சரண்யா பொன்வண்ணன் தெரிவித்துள்ளார்.