ஆயுஷ்மான் குரானா, ராதிகா ஆப்தே, தபு நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு இந்தியில் வெளியாகி பாக்ஸ் ஆஃபிஸில் பின்னி பிடல் எடுத்தது 'அந்தாதூன்' திரைப்படம். ப்ளாக் காமெடி க்ரைம் த்ரில்லர் வகையறாவைச் சேர்ந்த இந்தத் திரைப்படத்தில் கண் பார்வை குறைபாடுள்ளவராக ஆயுஷ்மான் நடித்திருந்தார். ரசிகர்களிடையே இத்திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இத்திரைப்படம் தெலுங்கில் ரீமேக்காகிவரும் நிலையில் தமிழிலும் ரீமேக் செய்யப்படுகிறது. இதன் தயாரிப்பு உரிமையை பெற்ற தியாகராஜன், தனது மகனும் நடிகருமான பிரசாந்தை திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க வைப்பதாகத் தெரிவித்திருந்தார்.
'பொன்மகள் வந்தாள்' திரைப்படத்தை இயக்கிய ஜே.ஜே. ஃப்ரெட்ரிக் இத்திரைப்படத்தை இயக்கவுள்ள நிலையில், படத்தில் தபுவின் கதாபாத்திரத்தில் நடிகை சிம்ரனை ஒப்பந்தம் செய்துள்ளதாகக் கூறப்பட்டது.
தற்போது படக்குழுவில் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஸ்ட்ராங்கான கதைக்களம், வெகு நாள்களுக்குப் பிறகு ரீ என்ட்ரி கொடுக்கும் பிரசாந்த், மூத்த நடிகையான சிம்ரன் என எகபோகத்துக்கு எதிர்பார்ப்பு இருக்கும்போது கூடுதலாக படக்குழுவில் சந்தோஷ் நாராயணன் இணைந்திருப்பது த்ரில்லர் ரசிகர்களுக்கு சற்று குஷியை கொடுத்துள்ளது.
இதையும் படிங்க... அந்தாதூன் ரீமேக்கில் இணைந்த சிம்ரன்!