ETV Bharat / sitara

’மீரா மிதுனை கைது செய்தது பெருமைக்குரிய ஒன்று’ - சனம் ஷெட்டி

தமிழ்நாடு காவல் துறையினர் மீரா மிதுனை கைது செய்த விஷயம் பெருமைக்குரிய ஒன்று என சனம் ஷெட்டி தெரிவித்துள்ளார்.

சனம் ஷெட்டி
சனம் ஷெட்டி
author img

By

Published : Aug 15, 2021, 1:32 PM IST

'தானா சேர்ந்த கூட்டம்', '8 தோட்டாக்கள்' உள்ளிட்ட படங்களில் நடித்த மீரா மிதுன், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார்.

சர்ச்சைக்குப் பெயர் போன நடிகை மீரா மிதுன் அடிக்கடி சமூக வலைதளங்களில் நடிகர், நடிகைகள் குறித்து ஏதேனும் பேசி வீடியோ வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்தவகையில் சமீபத்தில் பட்டியலின மக்கள் குறித்து அவதூறாகப் பேசியதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு, அளித்த புகாரின் பேரில் அவர் மீது ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து நேற்று (ஆக.14) கேரளாவில் பதுங்கியிருந்த மீராவை கைது செய்து,சைபர் கிரைம் காவல் துறையினர் இன்று (ஆக.15) சென்னை அழைத்து வந்தனர்.

இந்நிலையில், மீராவை கைது செய்தது குறித்து அவருடன் சக போட்டியாளராக பங்கேற்ற சனம் ஷெட்டி ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சனம் ஷெட்டி ட்விட்
சனம் ஷெட்டி ட்விட்

அதில், "தமிழ்நாடு காவல் துறையினர் மீரா மிதுனை கைது செய்த விஷயம் பெருமைக்குரிய ஒன்று. சைபர் கிரைம் காவல் துறையினர் சிறப்பான நடவடிக்கை எடுத்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக நாம் சகித்துக்கொண்ட அனைத்து வெறுக்கத்தக்க பேச்சுக்களும் தற்போது முடிவுக்கு வந்துள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ’சோறே போடல’ - மீரா மிதுன் புலம்பல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.