ETV Bharat / sitara

சமுத்திரக்கனி- யோகி பாபு காம்போவில் உருவாகும் யாவரும் வல்லவரே! - yavarum vallavare

சமுத்திரக்கனி, யோகி பாபு நடிப்பில் 'யாவரும் வல்லவரே' படம் உருவாக உள்ளது.

samuthirakani
சமுத்திரக்கனி
author img

By

Published : Jul 25, 2021, 3:47 PM IST

சென்னை: சமீபத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் "வெள்ளை யானை" என்ற திரைப்படம் வெளியானது. இன்னும் பல படங்களில் அவர் நடித்து வருகிறார்.

வால்டர், பாரிஸ் ஜெயராஜ் ஆகிய வெற்றி படங்களை கொடுத்த 11:11 புரோடெக்‌ஷன் டாக்டர் பிரபு திலக் வழங்க, தி கமிட்டி பிக்சர் (Thee Commity Picture) சார்பில் சி. ஆனந்த் ஜோசப் ராஜ் தயாரிப்பில், சமுத்திரகனி மற்றும் யோகி பாபு இணைந்து நடிக்கும் திரைப்படம், “யாவரும் வல்லவரே".

யாவரும் வல்லவரே!

அறிவழகன் இயக்கத்தில், அருண் விஜய் முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பில் உருவாகியுள்ள பார்டர் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் தன்னுடைய நிறுவனம் சார்பில் அடுத்தாக தற்போது N.A. ராஜேந்திர சக்ரவர்த்தி இயக்கத்தில் “யாவரும் வல்லவரே" எனும் புதிய படத்தை வழங்கவுள்ளார் பிரபு திலக்.

யோகி பாபு
யோகி பாபு

இப்படத்தில் சமுத்திரக்கனி, யோகி பாபு இணைந்து நடிக்க, அவர்களுடன் தமிழின் பல முன்னனி நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளனர். வால்டர், பாரிஸ் ஜெயராஜ் ஆகிய படங்களின் வெற்றிதான், சிறந்த கதையில் மேலும் பல படங்களை உருவாக்கும் ஊக்கத்தை தந்ததாக பிரபு திலக் கூறியுள்ளார்.

இது வேற மாதிரி கதை...

நான்கு வெவ்வேறு களத்தில் நடக்கும் சம்பவங்களை ஒரே இடத்தில் இணைக்கும் ஹைப்பர்லிங்ங் ஸ்டாரி யாவரும் வல்லவரே. இயக்குநர் N.A. ராஜேந்திர சக்ரவர்த்தி திரைக்கதையை கேட்டதும் வித்தியாசமான உணர்வு ஏற்பட்டதாகவும் பிரபு திலக் பூரிக்கிறார்.

யாவரும் வல்லவரே!
யாவரும் வல்லவரே!

இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, யோகி பாபு ஆகியோருடன், நான் கடவுள் ராஜேந்திரன், ரமேஷ் திலக், இளவரசு, போஸ் வெங்கட், மயில்சாமி, ஜோ மல்லூரி, போஸ்டர் நாதகுமார், ரித்விகா, சைத்தான் அருந்ததி மேனன், மற்றும் தேவ தர்ஷினி ஆகியோர் நடிக்கின்றனர்.

இதையும் படிங்க: 'மாரியம்மாவ புரிஞ்சுகிட்டதுக்கு நன்றி' - சார்பட்டா பரம்பரை நடிகை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.