சென்னை: இரண்டாவது திருமண நாளை முன்னிட்டு தனது காதல் மொமண்ட்ஸை அழகான நடன வீடியோவுடன் ஷேர் செய்துள்ளார் நடிகை சமந்தா.
தெலுங்கு இளம் நடிகர் நாகசைதன்யாவும், நடிகை சமந்தாவும் 2017 அக்டோபர் 6ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். இதையடுத்து அவர்கள் நேற்று தங்களது இரண்டாவது திருமண நாளை கொண்டாடியுள்ளனர்.
திருமண பந்தத்தில் இரண்டு ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள இந்த நட்சத்திர தம்பதியை, பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாழ்த்து மழையில் நனைய வைத்தனர்.
நாகசைதன்யாவின் உறவினரும் நடிகருமான ராணா டகுபதி, அழகான காதலர்களுக்கு இனிய திருமணநாள் வாழ்த்துகள். அற்புதமான ஆண்டாக அமையட்டும் என தனது இன்ஸ்டாகிராமில் இவர்களின் புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
- View this post on Instagram
Happy Anniversary you lovelies ❤️❤️❤️ Have an awesome year!! @chayakkineni @samantharuthprabhuoffl
">
இதே போல் நடிகை ரகுல் ப்ரீத் சிங், அனைவருக்கும் பிடித்தமான ஜோடி என்று குறிப்பிட்டு வாழ்த்தியுள்ளார்.
இதனிடையே நடிகை சமந்தா தனது காதல் தருணங்கள் முதல் திருமண நிகழ்வு வரை தேர்ந்தெடுத்த தொகுப்பாக சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில், நாகசைதன்யாவுடன் ஆடும் வீடியோ ஒன்றையும் இணைத்து, 'இரண்டு ஆண்டு திருமண பந்தம், 10 ஆண்டு காதல் - உன் மீது மேலும் வலுவடைந்துள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
2009ஆம் ஆண்டு வெளியான 'ஏ மாய செய்சவா' என்ற படத்தில் நாகசைதன்யா - சமந்தா ஆகியோர் முதல் முறையாக ஜோடி சேர்ந்தனர். இதைத்தொடர்ந்து நட்பாக பழகி பின் காதலை வளர்த்தனர். இதனையடுத்து இரு வீட்டார் சம்மதத்துடன் 2017ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி இந்து முறைப்படியும், 7ஆம் தேதி கிறித்தவ முறைப்படியும் இவர்கள் கோவாவில் திருமணம் செய்துகொண்டனர்.
திருமணத்துக்குப் பின்பு நாகசைதன்யா - சமந்தா ஆகியோர் தொடர்ந்து பிஸியாக படங்களில் நடித்து வருகின்றனர்.