ETV Bharat / sitara

பயத்தில் உறைய வைக்க மீண்டும் வருகிறது 'ஈவில் டெட்'

கான்ஜுரிங், அன்னபெல் தொடங்கி கோலிவுட்டில் ’காஞ்சனா’ பேய் வரை ஏராளமான பேய் படங்களை ரசிகர்கள் பார்த்து பழகிவிட்டாலும், 'ஈவில் டெட்' தரும் திரில் வித்தியாசமானது. தற்போது இதன் புதிய கதை உருவாகும் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

Hollywood Horror movies
New Evil dead movie to make by director Sam Raimi
author img

By

Published : Jan 8, 2020, 6:46 PM IST

லாஸ் ஏஞ்சல்ஸ்: ரசிகர்களை பயத்தில் உறைய வைத்த திகில் திரைப்படமான 'ஈவில் டெட்' படத்தின் புதிய கதையை உருவாக்கி வருவதாக இயக்குநர் சாம் ராய்மி தெரிவித்துள்ளார்.

1980களில் வெளியான திகில் படங்களில் ரசிகர்களை பயத்தால் உறைய வைத்த படம் 'ஈவில் டெட்'. விடுமுறையைக் கொண்டாட காட்டுப்பகுதியில் அமைந்திருக்கும் தனிமையான வீட்டுக்கு செல்லும் கல்லூரி நண்பர்களுக்கு நிகழும் அமானுஷ்ய நிகழ்வுகளும், அவர்களுக்கு ஏற்படும் கோரமான முடிவுகளும்தான் படத்தின் கதை.

இந்தப் படத்தில் இடம்பெற்ற திகில் காட்சிகள் ஒவ்வொன்றும் பார்வையாளர்களை பயத்தில் மிரள வைக்கும் விதமாக அமைந்திருக்கும். தற்போது கான்ஜுரிங், அன்னபெல் தொடங்கி கோலிவுட்டில் காஞ்சனா பேய் வரை ஏராளமான பேய் படங்களை ரசிகர்கள் பார்த்து பழகிவிட்டாலும், 'ஈவில் டெட்' தரும் திரில் அனுபவம் வித்தியாசமாகவே இருக்கும்.

சிறந்த ஹாரர் பட லிஸ்டில் தவறாமல் இடம்பெறும் இந்தப் படத்தின் புதிய கதையை உருவாக்கி வருவதாக அதன் இயக்குநர் சாம் ராய்மி தெரிவித்தார்.

இதுகுறித்து பேட்டி ஒன்றில் அவர் கூறியிருப்பதாவது:

புதிய 'ஈவில் டெட்' கதையை இயக்க விரும்புகிறேன். அதில் முதல் பாகத்தில் நடித்த ப்ரூஸ் கேம்பல்தான் நடிக்க வேண்டும் என விருப்பம். ஆனால் அவர் அந்தக் கதாபாத்திரத்திலிருந்து ஓய்வுபெற்றதாக கூறியிருக்கிறார். ஆனால் அது உண்மையில்லை என நம்புகிறேன் என்று தெரிவித்தார்.

1981இல் வெளியான 'ஈவில் டெட்' படத்தின் பிரதான கேரக்டரில் ப்ரூஸ் கேம்பல் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து 1987இல் வெளியான 'ஈவில் டெட் 2' படத்திலும் அவரே நடித்திருந்தார்.

தற்போது படம் வெளியாகி 29 ஆண்டுகள் ஆகியிருக்கும் நிலையில், இளம் இயக்குநருடன் இணைந்து 'ஈவில் டெட்' புதிய கதையை உருவாக்கி வருகிறார் இயக்குநர் சாம் ராய்மி. இந்தப் படத்துக்கு ப்ரூஸ் கேம்பெல் இணைத் தயாரிப்பாளராக பணியாற்றவுள்ளாராம்.

Intro:Body:

Los Angeles, Jan 7 (IANS) Filmmaker Sam Raimi wants to make another "Evil Dead" film with Bruce Campbell, despite the actor recently declaring he had retired from his most famous role.

"I would love to direct a new 'Evil Dead' movie ... but I'd really like to do it with Bruce. And he says he's retired the character. I hope not," Raimi told the website Bloody Disgusting.

The 60-year-old director added: "Bruce, (co-producer) Rob (Tapert) and I are working with a young filmmaker who is writing a new 'Evil Dead' story that he will direct."

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.