பாலிவுட் குயின் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிகை கங்கனா ரணாவத் தற்போது ஏ.எல். விஜய் இயக்கத்தில் 'தலைவி' படத்தில் நடித்துவருகிறார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலிலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இப்படம் உருவாகிவருகிறது. இதில் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி, ஜானகி ராமச்சந்திரனாக நடிகை மதுபாலா ஆகியோர் நடித்துவருகின்றனர். மேலும் பிரியாமணி, விஜய் தேவரகொண்டா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தை அலங்கரிக்கும் கங்கனா அதற்காகப் பல மாதங்களாகத் தன்னை தயார்படுத்திவந்தார். ஜெயலலிதாவின் உடல்மொழி, நடனம் உள்ளிட்ட பலவற்றை கற்று தற்போது படப்பிடிப்பில் உள்ளார்.
பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகிறது. ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் எதிர்பார்க்கப்படும் இப்படம் முதலில் ஜூன் 26 ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்திருந்தது. தற்போது கரோனா அச்சம் காரணமாக படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
தற்போது இப்படத்தில் பாலிவுட் நடிகை பாக்யஸ்ரீ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இவரின் கதாபாத்திரம் தான் படத்தின் முக்கிய திருப்புமுனையாக இருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: 'தலைவி' படத்தில் சசிகலா கேரக்டரில் பிரபல ஹீரோயின்!