ETV Bharat / sitara

மூத்த நடிகை சயிரா பானு மருத்துவமனையில் அனுமதி! - சயிரா பானு உடல்நிலை

மூத்த நடிகை சயிரா பானு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டுவருகின்றன.

Saira Banu
Saira Banu
author img

By

Published : Sep 1, 2021, 3:55 PM IST

மும்பை : 77 வயதான மூத்த நடிகை சயிரா பானு மும்பையில் உள்ள இந்துஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

சயிரா பானுக்கு இரத்த அழுத்தமும், இரத்தில் சர்க்கரையின் அளவு குறைந்தும், கூடியும் காணப்படுகிறது. இதே பிரச்சினைக்காக சயிரா பானு, கடந்த 3 நாள்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக மறைந்த இவரது கணவரும் பழம்பெரும் நடிகருமான திலிப் குமார் இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.

திலிப் குமார் ஜூலை 7ஆம் தேதி காலமானார். சயிரா பானு 1961இல் ஜங்கிள் என்ற படத்தின்மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார். இவர் நடிப்பில் வெளியான பதோசன் (1968), ஹேரா ஃபெரி (1976), தீவானா (1967) மற்றும் புரப் மற்றும் பாசிம் (1970) உள்ளிட்ட படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன.

இதையும் படிங்க : வலைப்பயிற்சியில் இறங்கியுள்ள 'சபாஷ் மித்து' டாப்ஸி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.