இந்த ஆண்டு வெளியான 'மான்ஸ்டர்' திரைப்படத்தின் மூலம் மக்களிடையே எஸ்.ஜே. சூர்யா நல்ல வரவேற்பை பெற்றார். அதைத்தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் உருவான தனது 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தின் வெளியீட்டிற்காக எஸ்.ஜே. சூர்யா காத்துக்கொண்டிருக்கும் வேளையில் ஆண்டின் இறுதியில் மக்களுக்கு இன்னொரு ஸ்பெஷலான செய்தியையும் அவர் வழங்கியிருக்கிறார்.
தற்போது ராதாமோகன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா நடித்துவரும் பொம்மை திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ரொமான்டிக் த்ரில்லர் வகையில் வெளியாகவுள்ள இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், ஒரு பொம்மையின் கையை பிடித்துக்கொண்டிருக்கிறார் எஸ். ஜே. சூர்யா.
-
Happy to release the First Look of @Radhamohan_Dir's BOMMAI starring @iam_SJSuryah & @priya_Bshankar.. A @thisisysr musical..@Richardmnathan editor #Anthony @KKadhirr_artdir
— Dhanush (@dhanushkraja) December 31, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Wishing the entire team all success ..... pic.twitter.com/rwfMtVf4pA
">Happy to release the First Look of @Radhamohan_Dir's BOMMAI starring @iam_SJSuryah & @priya_Bshankar.. A @thisisysr musical..@Richardmnathan editor #Anthony @KKadhirr_artdir
— Dhanush (@dhanushkraja) December 31, 2019
Wishing the entire team all success ..... pic.twitter.com/rwfMtVf4pAHappy to release the First Look of @Radhamohan_Dir's BOMMAI starring @iam_SJSuryah & @priya_Bshankar.. A @thisisysr musical..@Richardmnathan editor #Anthony @KKadhirr_artdir
— Dhanush (@dhanushkraja) December 31, 2019
Wishing the entire team all success ..... pic.twitter.com/rwfMtVf4pA
இப்படத்தினை ஏஞ்சல் ஸ்டுடியோஸ் எல்.எல்.பி நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். மான்ஸ்டர் படத்திற்குப் பிறகு மீண்டும் எஸ்.ஜே.வுடன் பிரியா பவானி சங்கர் இணைகிறார். வரும் காதலர் தினத்தன்று படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தெலங்கானா சம்பவத்தின் பின்னணியில் உருவாகியிருக்கும் 'வன்முறை'