பிரமாண்ட இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் உருவாகிவரும், 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்., ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், ஸ்ரேயா சரண் உள்ளிட்டோர் நடித்துவருகின்றனர்.
மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தின் ஷூட்டிங் குறித்த மேக்கிங் காணொலி அண்மையில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றது. நேற்று (ஆக. 1) சர்வதேச நண்பர்கள் தினத்தை முன்னிட்டு 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தில் இடம்பெற்றுள்ள 'நட்பு' பாடல் வெளியானது.
ஐந்து மொழிகளில் வெளியான இந்தப் பாடலைத் தமிழில் அனிருத் பாடியுள்ளார். பிரமாண்ட அரங்கில் அனிருத் பாட்டுப் பாட இறுதியில் ஜூனியர் என்.டி.ஆர்., ராம் சரண் ஆகியோர் என்ட்ரி கொடுத்தனர்.
இந்நிலையில் 'நட்பு' பாடல் வெளியான சிலமணி நேரங்களிலேயே யூ-ட்யூப் தளத்தில் 12 மில்லியன் (ஒரு கோடியே 20 லட்சம்) பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துவருகிறது. அதேபோல் யூ-ட்யூபிலும் இப்பாடல் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
இதையும் படிங்க: லாஸ்லியா நடிக்கும் கூகுள் குட்டப்பா... ஃபர்ஸ்ட் லுக் தேதி அறிவிப்பு!