ETV Bharat / sitara

மகாபலேஷ்வரர் அருகே விறுவிறுபான படப்பிடிப்பில் 'ஆர்ஆர்ஆர்' குழுவினர் - ஆர்ஆர்ஆர் படப்பிடிப்பு

மகாராஷ்டிராவிலுள்ள மகாபலேஷ்வரர் பகுதியின் அழகான பகுதியில் 'ஆர்ஆர்ஆர்' படக்குழுவினர் விறுவிறுபான படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

director rajamouli with RRR Team
ஆர்ஆர்ஆர் படக்குழுவினருடன் இயக்குநர் ராஜமெளலி
author img

By

Published : Dec 3, 2020, 10:30 PM IST

Updated : Dec 3, 2020, 11:00 PM IST

சென்னை: இயக்குநர் ராஜமெளலியின் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் படப்பிடிப்பு தற்போது மகாராஷ்டிரா பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதுதொடர்பாக ஆர்ஆர்ஆர் படத்தின் ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

விரைவாக பணிபுரியும் நேரமிது. மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள மகாபலேஷ்வரர் பகுதியின் அழகான பகுதியில் குறுகிய கட்டமாக படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார். இதனுடன் ஷூட்டிங் காட்சிகளின் வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் படப்பிடிப்பில் படத்தின் கதாநாயகர்கள் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் மற்றும் அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.

பீரியட் ஆக்‌ஷன் படமாக உருவாகி வந்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் கடந்த ஜூலை மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டதால் படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் நிறுத்தப்பட்ட நிலையில், படத்தின் ரிலீசும் 2021 ஜனவரி மாதத்துக்கு தள்ளிபோனது.

இதையடுத்து ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்ட பின் மீண்டும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கடந்த சில நாள்களுக்கு முன்னர் படத்தின் பிரமாண்ட சண்டைக்காட்சிக்காக 50 நாள்கள் இரவில் நடைபெற்று முடிந்ததாக படக்குழுவினர் அறிவித்தனர். இதைத்தொடர்ந்து குறுகிய இடைவெளிக்குப் பின்னர் தற்போது அடுத்தகட்ட படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர்.

இதையும் படிங்க: 50 நாள்கள் இரவில் பிரமாண்ட சண்டைக்காட்சி - 'ஆர்ஆர்ஆர்' படக்குழுவினர் புதிய அப்டேட்

Last Updated : Dec 3, 2020, 11:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.