தனுஷ், சாய் பல்லவி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வெளியான திரைப்படம் ‘மாரி 2’. இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இதில் இடம்பெற்ற ‘ரௌடி பேபி’ என்ற பாடல் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது. பிரபு தேவா நடன அமைப்பும் - யுவன் இசையும் சேர்ந்து இந்தப் பாடலை மாபெரும் ஹிட்டாக்கியது. இந்தப் பாடல் யூடியூப்பில் வெளியான 24 மணி நேரத்துக்குள் இதை 70 லட்சம் பேர் பார்த்திருந்தனர்.
-
When @dhanushkraja and @Sai_Pallavi92 dance, India watches - a lot! 🕺 → https://t.co/qmrqIGYCMP #YouTubeRewind pic.twitter.com/bfvPtcbkZ6
— YouTube India (@YouTubeIndia) December 6, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">When @dhanushkraja and @Sai_Pallavi92 dance, India watches - a lot! 🕺 → https://t.co/qmrqIGYCMP #YouTubeRewind pic.twitter.com/bfvPtcbkZ6
— YouTube India (@YouTubeIndia) December 6, 2019When @dhanushkraja and @Sai_Pallavi92 dance, India watches - a lot! 🕺 → https://t.co/qmrqIGYCMP #YouTubeRewind pic.twitter.com/bfvPtcbkZ6
— YouTube India (@YouTubeIndia) December 6, 2019
தற்போதுவரை இந்த பாடலை யூடியூப் தளத்தில் 715 மில்லியன் பார்வையாளர் பார்த்துள்ளனர். பில்போர்ட் யூடியூப் பட்டியலில் 2019 ஆம் ஆண்டு உலக அளவில் அதிகம் பார்க்கப்பட்ட பாடல்கள் பட்டியலில் ரௌடி பேபி 7 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. யூடியூப் நிறுவனம், 2019 ஆம் ஆண்டு இந்திய அளவில் அதிகம் அதிகம் பார்க்கப்பட்ட பாடல்களில் ரௌடி பேபி முதல் இடத்தை பிடித்துள்ளது என்பதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதுவரை வெளியான தென்னிந்திய மொழி பாடல்களில் அதிக பார்வையாளர்களை கடந்து ரௌடி பேபி பாடல் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது .