’நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தைத் தொடர்ந்து ரியோ ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பிளான் பண்ணி பண்ணனும்’. இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கியுள்ள இப்படத்தில் கதாநாயகியாக நடிகை ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். பாணா காத்தாடி, செம போத ஆகாத படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் - யுவன் ஷங்கர் ராஜா புதிய படத்தில் கூட்டணி அமைத்துள்ளனர்.
இதில் எம்.எஸ். பாஸ்கர், சந்தான பாரதி, பால சரவணன், ரேகா, லிவிங்ஸ்டன், விஜி சந்திரசேகர், ரோபோ சங்கர், முனீஸ்காந்த், ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அறிவித்தப்படி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
-
https://t.co/11ccPatYU6 !!! @positiveprint_ @rio_raj @dirbadri @thisisysr @Bala_actor !! Check out the official teaser of #PlanPanniPannanum #p3 !! Get ready for a fun ride woohoo 🙌🏽 pic.twitter.com/4AYaLTkOUB
— Ramya Nambessan (@nambessan_ramya) February 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">https://t.co/11ccPatYU6 !!! @positiveprint_ @rio_raj @dirbadri @thisisysr @Bala_actor !! Check out the official teaser of #PlanPanniPannanum #p3 !! Get ready for a fun ride woohoo 🙌🏽 pic.twitter.com/4AYaLTkOUB
— Ramya Nambessan (@nambessan_ramya) February 21, 2020https://t.co/11ccPatYU6 !!! @positiveprint_ @rio_raj @dirbadri @thisisysr @Bala_actor !! Check out the official teaser of #PlanPanniPannanum #p3 !! Get ready for a fun ride woohoo 🙌🏽 pic.twitter.com/4AYaLTkOUB
— Ramya Nambessan (@nambessan_ramya) February 21, 2020
ரியோவின் முதல் படம் போல் இப்படமும் காமெடி கமர்ஷியல் என்டர்டெயினராக உருவாகிவுள்ளது என்பது டீசர் மூலம் தெரிகிறது. மேலும் ரம்யா, கன்சீவாக இருக்கிறேன் என்று சொல்வதும், அதற்கு ரியோவின் ரியாக்ஷனும் என டீசர் முழுவதும் நகைச்சுவையாக உள்ளதாக ரசிகர்கள் கூறுகின்றனர். இதற்கிடையில் நடிகர் பால சரவணன், 'அவர்தான் அமித்ஷா மாதிரி ஐடியா பண்ணி, சந்தான பாரதி மாதிரி எக்ஸிக்யூட் பண்ணுவாருன்னு நமக்கு தெரியாதா' என்று பேசும் வசனம் டீசரில் இடம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: கோடை விடுமுறையை குதூகலமாக்க வருகிறாள் 'மோசக்காரி அனு'