ETV Bharat / sitara

’டிஸ்கோ கிங்’ பப்பி லஹிரியின் காலத்தால் அழியாத 10 பாடல்கள் - பப்பி லஹரியின் 10 பாடல்கள்

பப்பி லஹிரி தனது தனித்துவமான குரல், மெல்லிசை இசையமைப்பால் தனக்கென ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டார். அவர் இசையமைத்துப் பாடிய ஹிட் பாடல்களிலிருந்து சிவவற்றைத் தேர்வுசெய்வது சாத்தியமில்லை என்றாலும், சிறந்த பாடல்கள் சிலவற்றை இக்கட்டுரையில் காண்போம்.

’டிஸ்கோ கிங்’ பப்பி லஹரியின் காலத்தால் அழியாத 10 பாடல்கள்

author img

By

Published : Feb 17, 2022, 8:44 AM IST

மும்பை (மகாராஷ்டிரா): பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கரின் இழப்பில் இந்தியா தத்தளித்துக் கொண்டிருக்கையில், இசைத் துறையின் மற்றொரு தூணான எவர்கிரீன் டிஸ்கோ கிங் பப்பி லஹிரியின் இழப்பு இந்தியர்களை மேலும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. இவர் நேற்றிரவு (பிப்ரவரி 15) தூக்கத்திலேயே மூச்சுத்திணறல் ஏற்பட்டு காலமானார். இவருக்கு வயது 69.

இவரது இயற்பெயர் அலோகேஷ் லஹிரி. அபரேஷ் லஹிரி - பன்சுரி லஹிரி என்னும் இரு வங்காள பாடகர்களுக்கு மகனாகப் பிறந்தவர். பெற்றோர் இருவரும் பாரம்பரிய இசை, ஷியாமா சங்கீதத்தில் கலைஞர்களாக இருந்ததால், பப்பியின் ரத்தத்திலேயே இசை ஓடியது.

பாடகர் கிஷோர் குமார் அவரது தாய் மாமா. அவருக்காகவே நிறைய மெல்லிசைப் பாடல்களை இசைத்தவர். பப்பி டா தனது தனித்துவமான குரல், மெல்லிசையால் தனக்கான ஒரு அடையாளத்தை உருவாக்கினார். 1973ஆம் ஆண்டு வெளியான திரைப்படமான நன்ஹா ஷிகாரியில் முகேஷ் பாடிய 'து ஹி மேரா சந்தா'வின் இந்தி இசையமைப்பில் தொடங்கி நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக அவரது இசை வாழ்க்கை நீடித்தது.

1983-1985 வரையிலான காலகட்டத்தில், ஜீதேந்திரா கதாநாயகனாக நடித்த 12 சூப்பர் ஹிட் வெள்ளி விழா படங்களுக்கு இசையமைத்து சாதனை படைத்தார். 1986ஆம் ஆண்டு 33 படங்களுக்காக, 180 பாடல்களுக்கு மேல் பதிவு செய்ததற்காக கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தார். 2020ஆம் ஆண்டு 'பாகி 3'இல் அவரது கடைசிப் பாடல் இடம் பெற்றது. தங்க நகைகள், கருப்பு கண்ணாடிகளால் அலங்கரிக்கப்பட்ட அவரது ஆளுமைக்காக பப்பி டா தெளிவாக நினைவுகூரப்பட்டார்.

இவர் இசையமைத்து பாடிய ஹிட் பாடல்களில் இருந்து சிலவற்றை மட்டும் தேர்வு செய்வது சாத்தியமில்லை என்றாலும், இதோ அவரது சிறந்த பாடல்கள் சில:

நான் ஒரு டிஸ்கோ டான்ஸர் (டிஸ்கோ டான்ஸர்): டிஸ்கோ டான்ஸர் படத்தில் பாப்பி லஹிரி இசையில் உருவான இந்த ட்ரெண்ட் செட்டிங் பாடலை விஜய் பெனடிக்ட் பாடினார். இந்த பாடல் 80களில் வந்த தனித்துவமான பாடல்களில் ஒன்றாகும். இவர் இந்திய சினிமாவில் ஒருங்கிணைக்கப்பட்ட டிஸ்கோ இசையின் பயன்பாட்டை பிரபலப்படுத்தினார். ஒரே இசையமைப்பால் இசைத்துறையின் ஆட்டத்தையே மாற்றினார். இந்த பாடல் இன்றளவும் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது.

யார் பினா செயின் கஹான் ரே (சாஹேப்): 1985ஆம் ஆண்டு அனில் கபூர் - அம்ரிதா சிங் நடிப்பில் வெளியான திரைப்படம் 'சாஹேப்'. இத்திரைப்பட இசைத்தொகுப்பில் பப்பி டாவின் சந்தேகத்திற்கிடமில்லாத ரத்தினக் கல் இதுவே. இசையமைப்பாளரும், எஸ்.ஜானகியும் இணைந்து பாடிய இந்தப் பாடல் மாபெரும் வெற்றி பெற்றது. காஸ்ட்யூம் முதல் செட் டிசைன், இன்ஸ்ட்ரூமென்டேஷன் வரை, இந்தப் பாடல் 80கால கட்டத்தில் உருவானது தெரியும். பப்பி டா பாடிய பாடல்களில் இதுவும் ஒன்று.

ராத் பாக்கி பாத் பாக்கி (நமக் ஹலால்): 'நமக் ஹலால்' (1982) இலிருந்து, புகழ்பெற்ற ஆஷா போன்சலே குரல் கொடுத்த இந்த ஆவேசமான ஹிட்டுக்கு இசையமைத்தது மட்டுமல்லாமல், இணைந்து பாடினார். இது பர்வீன் பாபி, சஷி கபூர், அமிதாப் பச்சன் ஆகியோர் நடிப்பில் வெளியானது.

பர்வீனின் கறுப்பு நிற பளபளக்கும் உடை, அவரது உணர்ச்சிகரமான அசைவுகள் ஆகியவை பாடலை மற்றொரு நிலைக்கு உயர்த்தியது. படம் பாக்ஸ் ஆபிஸ் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்தது. பப்பி டாவின் இசை மீண்டும் அனைவர் மத்தியிலும் பேசப்பட்டது. இப்படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன.

பியார் மங்கா ஹை தும்ஹிஸ் (காலேஜ் கேர்ள்): பப்பி டா ஒரு டிஸ்கோ-தீம் இசையமைப்பாளர் மட்டுமல்ல, பல்துறை இசையமைப்பாளராகவும் விளங்கினார். கிஷோர் குமார் பாடிய இந்த இதயத்தைத் தொடும் பாடல் 1978ஆம் ஆண்டு வெளியான 'காலேஜ் கேர்ள்' திரைப்படத்தில் இடம்பெற்றிருந்தது. கிஷோர் தாவின் குரல் கேட்போரை உருக வைக்கும் ஆற்றல் கொண்டது. இது உண்மையிலேயே பாப்பி டாவின் மிகச்சிறந்த பாடல்களுள் ஒன்றாகும்.

கிசி நாசர் கோ தேரா (ஐத்பார்): இந்தியத் திரையுலகிற்கு டிஸ்கோ இசையைக் கொண்டு வந்தவர் பாப்பி டா என்றே மக்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இவர் பிற இசை வகைகளில் அவர் ஆற்றிய பணியைப் பற்றி பலரும் தெரியாது. இவர் இசையமைத்த 'கஜல்' மனச்சோர்வடைந்த தொனியும், வலியின் ரீங்காரமும் கொண்டது. பூபேந்திரா - ஆஷா போன்சலேவின் ஆத்மார்த்தமான குரலில் இந்த பாடல் வெளியானது. 1985ஆம் ஆண்டு வெளியான ஐட்பார் திரைப்படத்திலேயே இப்பாடல் இடம் பெற்றிருந்தது.

நைனோ மாய் சப்னா (ஹிம்மத்வாலா): ஹிம்மத்வாலா (1983) திரைப்படத்தின் இந்தப் பாடல் அபாரமான வெற்றியைப் பெற்றது. இந்தித் திரையுலகில் ஸ்ரீதேவியை நிலைநிறுத்தியதில் இந்த பாடலுக்கு முக்கிய பங்குண்டு. ஆஷா போன்சலே - கிஷோர் குமார் போன்ற எவர்கிரீன் ஜோடிகளால் இந்த பாடல் பாடப்பட்டது.

தம்மா தம்மா லோகே (தானேடார்): தானேடார் (1990) திரைப்படத்தின் இந்தப் பாடல், அதன் நகைச்சுவையான நடன அசைவுகள், பாடல் வரிகளால் ஹிட்டடித்தது. பிரபல மைக்கேல் ஜாக்சன் பாடலான 'பேட்' பாடலைப் போலவே நடனப் படிகளும் இருந்தன. இது சஞ்சய் தத் - மாதுரி தீட்சித் ஜோடி நடிப்பில் வெளியானது. மறைந்த சரோஜ் கான் நடனக்காட்சிகளை இயக்கினார்.

பப்பி டா - அனுராதா பௌட்வால் இருவரும் இணைந்து இந்த பாடலை பாடினர். மோரி காண்டேவின் 1987ஆம் ஆண்டு ஆல்பமான அக்வாபா பீச்: தாமா, யே கே யே கே ஆகிய இரண்டு பாடல்களால் இந்த டியூன் ஈர்க்கப்பட்டது. 2017ஆம் ஆண்டு வெளியான பத்ரிநாத் கி துல்ஹனியா திரைப்படத்திற்காக, தனிஷ்க் பாக்சியின் பாடல் மீண்டும் ஒலிபரப்பப்பட்டது.

மனா ஹோ தும் பெஹாத் ஹசீன் (டூட் கிலோன்): 1978ஆம் ஆண்டு சேகர் கபூர் - ஷபானா ஆஸ்மி நடிப்பில் வெளியான டூட் கில்லோன் திரைப்படத்தில் இந்த பாடல் இடம்பெற்றிருந்தன. இந்தப் பாடலுக்கு ஷபானாவின் தந்தை கைஃபி ஆஸ்மி வரிகளை எழுதியுள்ளார்.

பாடகர் யேசுதாஸின் காந்தக் குரல் பாடலுக்கு உயிர் தந்துள்ளது. கிட்டார், பியானோ, கோரஸ் பாடகர்கள் என அனைத்தும் இந்தப் பாடலில் இடம்பெற்றிருந்தன. இந்தி சினிமாவில் உருவாக்கப்பட்ட காதல் பாடல்களில் இதுவும் ஒன்று.

ஆவோ தும்ஹே சந்த் பே லே ஜாயென் (சாக்மீ): 1975ஆம் ஆண்டு வெளிவந்த சாக்மீ திரைப்படத்தில், நைட்டிங்கேல் லதா மங்கேஷ்கரின் குரலில் இந்த பாடல் வெளியானது. இந்தப் பாடல் பப்பி டாவின் ஆரம்பகால வெற்றிகளில் ஒன்றாகும். இந்தப் பாடல் ஒரு தாய், தன் குட்டி தேவதைக்காக முனகுவதைப் போன்ற ஒரு இனிமையான தாலாட்டாகும்.

கபி அல்விதா நா கெஹ்னா (சால்தே சல்தே): இந்த பாடல் பள்ளி, கல்லூரி பிரியாவிடையின் போது அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவழைக்கக் கூடியது. இந்த பாடல் 1978ஆம் ஆண்டில் வெளியான பப்பி டாவின் தலைசிறந்த படைப்பாகும்.

இந்தப் பட்டியலில் உள்ள கடைசிப் பாடல், "வார்த்தைகளால் நினைவில் கொள்... ஒருபோதும் விடைபெறாதே" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது... இது உண்மையிலேயே இந்தியா பழம்பெரும் பாப்பி டாவை நினைவில் கொள்ளும். அவர் இருந்தார், இருக்கிறார், என்றும் இருப்பார்... இந்தியா பெற்ற தங்கமான இசையமைப்பாளர், பாடகர்களுள் ஒருவர் பப்பி டா என்பது மறுக்க முடியாதது.

இதையும் படிங்க: 'புஷ்பா - தி ரைஸ்' பாடல்கள் வெற்றி; தேவிஶ்ரீ பிரசாத்துக்கு குவியும் பாராட்டு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.