ETV Bharat / sitara

வெள்ளி விழாவில் அடியெடுத்துவைக்கும் ரியல் பொம்மி பேக்கரி - real bommi bakery celebrates silver jubilee

ரியல் பொம்மி பேக்கரியான பன் வேர்ல்ட் ஐயங்கார் பேக்கரி தொடங்கப்பட்டு 25 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள நிலையில் ரசிகர்கள் கேப்டன் கோபிநாத்தின் மனைவிக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

real Soorarai Pottru bommi bakery celebrates silver jubilee

author img

By

Published : Nov 26, 2020, 9:47 PM IST

கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவான திரைப்படம் சூரரைப் போற்று. இத்திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனத்தில் பொம்மியாகப் பதிந்தவர் அபர்ணா பாலமுரளி. கேப்டன் கோபிநாத்தின் மனைவி பாத்திரத்தில் நடித்த இவர் திரைப்படத்தில் பொம்மி பேக்கரி உரிமையாளராக நடித்திருந்தார்.

இன்று ரியல் பொம்மி பேக்கரியான பன் வேர்ல்ட் ஐயங்கார் பேக்கரி 25 ஆண்டுகளை நிறைவுசெய்து வெள்ளி விழாவைக் கொண்டாடுகிறது. இதன் உரிமையாளரான தனது மனைவிக்கு வாழ்த்து தெரிவித்து கேப்டன் கோபிநாத் ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

அதில், "25ஆவது ஆண்டு விழாவை பன் வேர்ல்ட் ஐயங்கார் பேக்கரி கொண்டாடுகிறது. தனது கனவை ஒருபோதும் விட்டுவிடாத வாழ்க்கைத் துணைக்கு வாழ்த்துகள்" எனத் தெரிவித்திருந்தார்.

திரைப்படத்தில் பொம்மியைக் கொண்டாடி தீர்த்த ரசிகர்கள் கேப்டனின் மனைவிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.

இதையும் படிங்க... ஒரு வழியா இ பாஸ் வாங்கிய 'அயலான்': படக்குழுவின் அதிரடி அப்டேட்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.