நடிகர் ரவி தேஜா, இயக்குநர் கோபிசந்த் மலினேனி கூட்டணியில் வெளியாகி ஹிட் அடித்த இரு படங்கள் 'டான் சீனு' மற்றும் 'பலுபு'. இந்த இரு படங்களைத் தொடர்ந்து இருவரும் மீண்டும் இணையும் புதிய திரைப்படத்துக்கு 'க்ராக்' என பெயரிடப்பட்டுள்ளது.
ஆக்ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் காலை வெளியாகியது. இதனை நடிகர் ரவி தேஜா, குழந்தைகள் தினமான இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பும் இன்று தொடங்கியது. இப்படத்தில் கரடு முரடான போலீஸ் அதிகாரியாக ரவி தேஜா நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார்.
வரலட்சுமி சரத்குமார், சமுத்திரக்கனி ஆகியோர் படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு தமன் இசையமைக்கிறார். சண்டை காட்சிகளை ராம் லக்ஷ்மனும், வசனங்களை சாய் மாதவ் புராவும் கவனித்துக்கொள்கின்றனர். தற்போது 'டிஸ்கோ ராஜா' வில் நடித்துவருகிறார் ரவி தேஜா. இப்படம் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விறுவிறுப்பு காட்சிகளுடன் வெளியான அமலா பாலின் 'அதோ அந்த பறவை போல' டீசர்!