பாலிவுட் நடிகை ரவீணா டாண்டன் தமிழில் கமல் ஹாசனின் ஆளவந்தான் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். இவர் தற்போது உருவாகி வரும் 'கே.ஜி.எஃப் 2' படத்தில் நடித்து வருகிறார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
இதற்கிடையில் சமீபத்தில் ரவீணா, அவரது மகளுடன் இணைந்து தனது குடும்பத்தினரின் விழாவுக்கு சென்றுள்ளார். அப்போது நீண்ட நேரமாக கார் வருவதற்காக காத்திருந்தார். பிறகு நேரம் இல்லாத காரணத்தினால் ஆட்டோ மூலம் விழாவுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் முதல் முறையாக ஆட்டோவில் சென்றது குறித்து நடிகை ரவீணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதை கண்ட ரசிகர்கள் அந்த ஆட்டோ ஓட்டுனர், நீங்கள் நடிகை என்பதை கண்டு பிடித்தாரா? என்று கேள்வி எழுப்பினர்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
இதற்கு பதிலளிக்கும் வகையில் ரவீனா, ஆட்டோ ஓட்டுனருடன் பேசிய போது எடுத்த விடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் ரவீனா நடித்த படங்கள் பற்றியும், அவரது நடிப்பு குறித்தும் பாராட்டியுள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதையும் படிங்க: 'பாலிவுட் டைகர்' இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடருபவர்களின் எண்ணிக்கை உயர்வு