நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் டிசம்பர் 17ஆம் தேதி வெளியான திரைப்படம் புஷ்பா. இதில் ஃபகத் ஃபாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றது. புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் இந்த ஆண்டு வெளியாகவுள்ளது.
இந்நிலையில் நடிகை ராஷ்மிகா படத்திற்கு கிடைத்த வரவேற்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "உங்கள் அன்புக்கு நன்றி. இது தான் எங்களை இன்னும் கடினமாக உழைக்க வைக்கிறது. புஷ்பா 2 படம் மிக சிறப்பாக இருக்கும்"என குறிப்பிட்டுள்ளார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியான புஷ்பா சுமார் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூல்செய்து சாதனை படைத்துள்ளது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
இதையும் படிங்க: 'சமந்தா மகிழ்ச்சியாக இருந்தால்.... '- விவாகரத்து குறித்து வாய்த்திறந்த நாக சைதன்யா