'மைனா', 'கும்கி' போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் பிரபு சாலமன். இவர் தற்போது நடிகர்கள் விஷ்ணு விஷால், ராணா டகுபதி நடிப்பில் இயக்கியுள்ள திரைப்படம் 'காடன்'. ஈரோஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி, ஆகிய மூன்று மொழிகளிலும் இத்திரைப்படம் உருவாகியுள்ளது. விலங்குகள், பழங்குடியினரைக் காப்பாற்றப் போராடும் ஒரு மனிதனைக் குறித்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் தெலுங்கில் 'ஆரண்யா', இந்தியில் 'ஹாத்தி மேரி சாத்தி' என்ற பெயரில் இந்த ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாக இருந்தது.
ஆனால் கரோனா தொற்று அச்சம் காரணமாக படக்குழுவினர் வெளியீட்டு தேதியை தள்ளி வைத்தனர். தற்போது இந்தப் படம் 2021ஆம் ஆண்டு மகர சங்கராந்தி பண்டிகையின்போது வெளியிடப்படும் எனப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
ராணா டகுபதியின் 'காடன்' வெளியாகும் தேதி அறிவிப்பு - காடன் பட அப்டேட்
சென்னை: விஷ்ணு விஷால், ராணா டகுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'காடன்' திரைப்படம் வெளியாகும் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.