ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் ’RRR’ படத்தில் ராம்சரணின் கதாபாத்திரம் குறித்த வீடியோ வெளியாகியுள்ளது.
’பாகுபலி ' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகிவரும் படம் ’RRR’. இப்படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண், அலியா பட் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் உகாதி பண்டிகையை முன்னிட்டு இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. அதில் அனல் பறக்கும் நெருப்பு, நீர் ஆகியவை இடம் பெற்றுள்ளன. மேலும் தற்காலிகமாக 'ஆர்.ஆர்.ஆர்' என்ற அழைக்கப்பட்ட இப்படத்திற்கு, 'இரத்தம், ரணம், ரெளத்திரம்' என்று தலைப்பிட்டுள்ளதாக மோஷன் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
Ramaraju's visual with Bheem's voice... #BheemForRamaraju
— DVV Entertainment (@DVVMovies) March 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Telugu - https://t.co/VkPXlgibIA
Tamil - https://t.co/f7FnuZiyz5
Hindi - https://t.co/IcNF1BgSuH
Kannada - https://t.co/z1SkRMMV2a
Malayalam - https://t.co/5tGQw61Pve
">Ramaraju's visual with Bheem's voice... #BheemForRamaraju
— DVV Entertainment (@DVVMovies) March 27, 2020
Telugu - https://t.co/VkPXlgibIA
Tamil - https://t.co/f7FnuZiyz5
Hindi - https://t.co/IcNF1BgSuH
Kannada - https://t.co/z1SkRMMV2a
Malayalam - https://t.co/5tGQw61PveRamaraju's visual with Bheem's voice... #BheemForRamaraju
— DVV Entertainment (@DVVMovies) March 27, 2020
Telugu - https://t.co/VkPXlgibIA
Tamil - https://t.co/f7FnuZiyz5
Hindi - https://t.co/IcNF1BgSuH
Kannada - https://t.co/z1SkRMMV2a
Malayalam - https://t.co/5tGQw61Pve
மிகவும் பிரமாண்டமாக வெளியாகியுள்ள மோஷன் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலானது. தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடா, மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகி வரும் இப்படம், அடுத்தாண்டு ஜனவரி மாதம் 8ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனிடையே இன்று (மார்ச் 27) ராம் சரணின் பிறந்த நாளை முன்னிட்டு, படக்குழுவினர் சார்பில் ராம் சரணின் கதாபாத்திரம் குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
-
Presenting you the first look of @AlwaysRamCharan as RAMA RAJU... #RRRMovie #BheemforRamaraju
— DVV Entertainment (@DVVMovies) March 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
#RRRMovie @ssrajamouli @tarak9999 @ajaydevgn @aliaa08 @oliviamorris891 @RRRMovie pic.twitter.com/XY1fApm1Xh
">Presenting you the first look of @AlwaysRamCharan as RAMA RAJU... #RRRMovie #BheemforRamaraju
— DVV Entertainment (@DVVMovies) March 27, 2020
#RRRMovie @ssrajamouli @tarak9999 @ajaydevgn @aliaa08 @oliviamorris891 @RRRMovie pic.twitter.com/XY1fApm1XhPresenting you the first look of @AlwaysRamCharan as RAMA RAJU... #RRRMovie #BheemforRamaraju
— DVV Entertainment (@DVVMovies) March 27, 2020
#RRRMovie @ssrajamouli @tarak9999 @ajaydevgn @aliaa08 @oliviamorris891 @RRRMovie pic.twitter.com/XY1fApm1Xh
அதில் ராம்சரண் அல்லூரி சீதாராம ராஜூ என்னும் கதாபாத்திரத்தில் காவல்துறை அதிகாரியாக நடிப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. வீடியோவின் பின்னணியில், "அமைதியா நின்னா அவர் எறியுற தனல், சீறிப்பாய்ஞ்சா அவர் வாள் நட்சத்திரம். அவர் பக்கத்துல நெருங்குனா மரணத்துக்கு வேர்த்து ஊத்தும்.
பாய்ஞ்சு வரும் தோட்டாவெல்லாம், அவர் நில்லுனா நிக்கும். அவர் யார் தெரியுமா, ஏன் அண்ணன், காட்டுக்கு மன்னன் அல்லூரி சீதாராம ராஜூ என்று வழக்கமான தெலுங்கு சினிமாவுக்கு உரித்தான வசனங்களுடன் ராம்சரண் உடற்பயிற்சி செய்வது போன்றும் அந்த வீடியோவில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ வெளியான சில நிமிடங்களிலேயே சமூகவலைதளத்தை ஆக்கிரமித்துவருகிறது.