ETV Bharat / sitara

HBD ரகுல் பிரீத் சிங்

author img

By

Published : Oct 10, 2021, 7:37 AM IST

நடிகை ரகுல் பிரீத் சிங் பிறந்த நாளான இன்று திரைப்பிரபலங்கள், அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ரகுல் பிரீத் சிங்
ரகுல் பிரீத் சிங்

நடிகை ரகுல் பிரீத் சிங் 2009 ஆம் ஆண்டு கில்லி என்ற கன்னட திரைப்படத்தில் நடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கினார். தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய சினிமாவில் குறிப்பிடப்படும் ஒரு நடிகையாக அந்தஸ்தை பெற்று பிரபலமாகியுள்ளார். இவர் தனது 18 வயதிலேயே மாடலிங் பணியில் ஈடுபட்டுள்ளார்.

HBD ரகுல் பிரீத் சிங்
HBD ரகுல் பிரீத் சிங்

1990ஆம் ஆண்டு பிறந்த ரகுல் ப்ரீத் சிங் இந்திய திரையுலகில் மாடலாக அறிமுகமானார். தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி படங்களில் நடித்து கொண்டிருக்கும் ரகுல் ப்ரீத் சிங் மூன்று பிலிம்பேர் விருதுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

ஒரு SIIMA விருதையும் பெற்றுள்ளார். 2017ஆம் ஆண்டு தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகளில் சிறந்த தெலுங்கு நடிகைக்கான விருதைப் பெற்றார்.

HBD ரகுல் பிரீத் சிங்
HBD ரகுல் பிரீத் சிங்

2011ஆம் ஆண்டு கெரடம் என்ற படத்தின் மூலம் தெலுங்கிலும், 2012ல் தடையறத் தாக்க படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமானார். தொடர்ந்து, என்னமோ ஏதோ, தேவ், தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

தீரன் அதிகாரத்தில் இவர் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருப்பார். இப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

ரகுல் பிரீத் சிங்
ரகுல் பிரீத் சிங்

2019ஆம் ஆண்டு ரகுல் ப்ரீத் சிங் - சூர்யா நடிப்பில் வெளிவந்த NGK படத்தில் இடம்பெற்ற அன்பே பேரன்பே பாடல் யூடியூபில் 12 கோடிக்கும் மேற்பட்டவர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.

HBD ரகுல் பிரீத் சிங்
HBD ரகுல் பிரீத் சிங்

தமிழில் தற்போது 'அயலான்' படத்தில் நடித்து முடித்துள்ளார். அதே போல் இந்தியன் 2 படத்திலும் இவர் நடித்து வருகிறார்.

இவரது பிறந்த நாளான இன்று திரைப்பிரபலங்கள்,அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

HBD ரகுல் பிரீத் சிங்
HBD ரகுல் பிரீத் சிங்

இதையும் படிங்க : ரட்சிக்கும் 'ராட்சசி' ரகுல் பிரீத் சிங் போட்டோஷூட்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.