'தர்பார்' திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் சிறுத்தை சிவாவுடன் கைகோர்த்துள்ளார். 'தலைவர் 168' என்ற பெயரில் உருவாகிவந்த இப்படத்திற்கு 'அண்ணாத்த' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தது.
இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, நயன்தாரா, பிரகாஷ்ராஜ், சூரி என மாபெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார். இந்நிலையில், 'அண்ணாத்த' படத்தின் ஸ்கிரிப்ட் முதலில் அஜித்துக்கு எழுதப்பட்டதாக சமூகவலைதளத்தில் இணையவாசிகள் கூறி வருகின்றனர்.
இதுகுறித்து சமூகவலைதளத்தில் இணையவாசிகள் கூறுகையில், 'அண்ணாத்த' படத்தின் ஸ்கிரிப்ட் முதலில் அஜித்துக்காக எழுதப்பட்டது. 'விஸ்வாசம்' படத்தின் கதையை சிவா அஜித்திடம் கூறும் முன் 'அண்ணாத்த' ஸ்கிரிப்ட்டை கூறியுள்ளார். பின் 'விஸ்வாசம்' படத்தின் கதை அஜித்துக்கு பிடித்து போகவே அஜித் அப்படத்தில் நடிக்க கால்ஷீட் ஒதுக்கியுள்ளார். 'விஸ்வாசம்' தல சாய்ஸ் 'அண்ணாத்த' தலைவர் சாய்ஸ். பின் அண்ணாத்த ஸ்கிரிப்டில் சில மாற்றங்களோடு ரஜினியிடம் சிவா சொல்லவே ரஜினிக்கு பிடித்து போய் தற்போது கால்ஷிட் வழங்கியுள்ளார். எனவே அண்ணாத்த படத்தின் கதை அஜித்துக்கு தெரியும் என்று கூறியுள்ளனர்.
'அண்ணாத்த' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நிறைவடைந்துள்ளது. இப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் வாசிங்க: சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேர்ந்த லேடி சூப்பர் ஸ்டார் - 'தலைவர் 168' லேட்டஸ்ட் அப்டேட்