ETV Bharat / sitara

ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிடும் ‘தர்பார்’? - ரிலையன்ஸ் நிறுவனம்

வட இந்தியாவில் ரஜினியின் ‘தர்பார்’ திரைப்படத்தை ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வெளியிடவுள்ளது.

Rajinikanth's darbar released by reliance entertainment in north india

author img

By

Published : Dec 16, 2019, 12:37 PM IST

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகவுள்ள திரைப்படம் ‘தர்பார்’. இதில் பிரதிக் பப்பார், சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் இதன் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. இந்தப் படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

‘தர்பார்’ படத்தின் ட்ரெய்லர், ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் தேதியன்று வெளியாகும் என அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் அன்று புதிய போஸ்டர் ஒன்று மட்டுமே வெளியானது. இந்நிலையில் இன்று (டிசம்பர் 16) மாலை 6.30 மணிக்கு படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ‘தர்பார்’ படம் பற்றி மேலும் ஒரு புதிய அப்டேட் கிடைத்துள்ளது. வட இந்தியாவில் ‘தர்பார்’ படத்தை ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வெளியிடவுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் வெளியிட ரிலையன்ஸ் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.

இதையும் படிங்க: HappyBirthdaySuperstar: இது ரஜினி சார் உரசாதீங்க!

Intro:Body:

darbar release 

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.