சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடிக்கும் திரைப்படம் 'அண்ணாத்த'. கரோனா தொற்று காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு பாதியில் நின்றது. இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார்.
இப்படத்தில் ரஜினிக்கென்றே அரசியல் பஞ்ச் வசன காட்சிகள் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது. கரோனா தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படப்பிடிப்பு கடந்த மாதம் மீண்டும் ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் தொடங்கியது. ஆனால் அங்கு நான்கு பேருக்கு கரோனா தொற்று ஏற்படவே பதறிப்போன படக்குழு உடனடியாக படப்பிடிப்பை நிறுத்திவிட்டு சென்னை திரும்பியது.
இதையடுத்து ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் அரசியல் கட்சி தொடங்கவில்லை என அறிவித்தார். தற்போது ரஜினியின் உடல்நிலை சீரான பிறகே 'அண்ணாத்த' படப்பிடிப்பில் மீண்டும் கலந்துகொள்வார் என தெரிகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ள நிலையில் அது முடிந்த பிறகே 'அண்ணாத்த' படப்பிடிப்பில் கலந்துகொள்ளலாம் என ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளாராம். இதனால் ஜூன், ஜூலை மாதத்துக்குப் பிறகு படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
#Annaatthe will be releasing on November 4th, 2021!
— Sun Pictures (@sunpictures) January 25, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Get ready for #AnnaattheDeepavali! @rajinikanth @directorsiva @KeerthyOfficial @immancomposer pic.twitter.com/NwdrvtVtSE
">#Annaatthe will be releasing on November 4th, 2021!
— Sun Pictures (@sunpictures) January 25, 2021
Get ready for #AnnaattheDeepavali! @rajinikanth @directorsiva @KeerthyOfficial @immancomposer pic.twitter.com/NwdrvtVtSE#Annaatthe will be releasing on November 4th, 2021!
— Sun Pictures (@sunpictures) January 25, 2021
Get ready for #AnnaattheDeepavali! @rajinikanth @directorsiva @KeerthyOfficial @immancomposer pic.twitter.com/NwdrvtVtSE
சென்னையிலேயே செட் அமைக்கப்பட்டு படப்படிப்பு நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், அண்ணாத்த திரைப்படம் இந்தாண்டு தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதன்படி, 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 4ஆம் தேதி அண்ணாத்த வெளியாகும் என படக்குழுவினர் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பையடுத்து ரசிகர்கள் தற்போது தீபாவளி கொண்டாட்டத்திற்கு தயாராகிவிட்டனர்.