ETV Bharat / sitara

ரஜினிகாந்த்துக்கு ரத்த குழாய் திசு அழிவு பாதிப்பு: வெளியான தகவல்

author img

By

Published : Oct 29, 2021, 12:08 PM IST

நடிகர் ரஜினிகாந்திற்கு ரத்த குழாய் திசு அழிவு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Rajini
Rajini

நடிகர் ரஜினிகாந்த் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று (அக்.28) அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு மருத்துவர்கள் முழு உடல் பரிசோதனை மேற்கொண்டனர். இந்தப் பரிசோதனையில், ரஜினிகாந்துக்கு ரத்த நாள திசு அழிவு பாதிப்பு கண்டறியப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக ரத்த குழாய்களில் படியும் கொழுப்பை கரைக்கும் ஆற்றலை உடல் இழக்கும்போது நெக்ரோசிஸ் (necrosis) எனப்படும் இந்தப் பாதிப்பு ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் ரஜினிக்கு ஏற்பட்டுள்ள ரத்த நாள பாதிப்பை சரி செய்யும் சிகிச்சையில் மருத்துவர்கள் ஈடுப்பட்டுள்ளதாகவும், நரம்பியல் மற்றும் இருதய துறை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறப் படுகிறது.

ஏற்கனவே ரஜினிகாந்த் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்துள்ளதால், பிற உறுப்புகளின் செயல்பாடுகளை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.