சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அக்டோபர் 28ஆம் தேதி மாலை லேசான மயக்க நிலையில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். வழக்கமான பரிசோதனைக்காக ரஜினி அனுமதிக்கப்பட்டு இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இதையடுத்து, ரத்த நாளத்தில் கொழுப்பு அடைப்பை நீக்குவதற்கான ரத்தநாள மறுசுழற்சி அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வாயிலாகத் தெரிவித்தது. அந்த அறிக்கையில் அடுத்த சில நாள்கள் ஓய்வுக்குப் பின்னர் ரஜினி வீடு திரும்புவார் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
வீடு திரும்பினார்
தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் நவம்பர் 1ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப உள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில், நேற்றிரவே (அக். 31) அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
இந்நிலையில், ரஜினியின் மகள் சௌந்தர்யா புதிதாக தொடங்கியுள்ள 'ஹூட்' என்னும் குரல் சார்ந்த சமூக வலைதள செயலியில் ரஜினிகாந்த் குரல் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அனைவருக்கும் நன்றி
அந்தப் பதிவில்," சிகிச்சை முடிந்து நலமாக இன்று (அக்.31) இரவு வீடு திரும்பினேன். எனது ஆரோக்கியத்துக்காக பிரார்த்தனை செய்த ரசிகர்கள் உள்பட அனைவருக்கும எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.
-
Returned home 🙏 https://t.co/35VeiRDj7b
— Rajinikanth (@rajinikanth) October 31, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Returned home 🙏 https://t.co/35VeiRDj7b
— Rajinikanth (@rajinikanth) October 31, 2021Returned home 🙏 https://t.co/35VeiRDj7b
— Rajinikanth (@rajinikanth) October 31, 2021
ஹூட் செயலியை ரஜினி கடந்த அக்.25ஆம் தேதி தொடங்கி வைத்திருந்தார். ஹூட் செயலில் முதல் குரல் பதிவாக ரஜினி, தாதா பால்கே சாகேப் விருதைப் பெற்றது குறித்து பேசியிருந்தார். ஹூட் செயலியில், 15 இந்திய மொழிகளும், 10 சர்வதேச மொழிகளும் இடம்பெற்றுள்ளன.
முன்னதாக, சௌந்தர்யா ரஜினிகாந்த், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஹூட் செயலி குறித்து விவரித்து வாழ்த்து பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் ரஜினிகாந்த்!