ETV Bharat / sitara

'தர்பார் படத்திற்கு பேனர்கள் வைக்க ரஜினி அனுமதிக்கக் கூடாது' - நடிகர் ஆரி

சென்னை: எம்டிபிசி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகிய காதல் அம்பு படத்தின் இசை, ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் தர்பார் படத்திற்கு பேனர்கள் வைக்க ரஜினி அனுமதிக்கக் கூடாது என நடிகர் ஆரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

actor-aari-
author img

By

Published : Sep 15, 2019, 10:22 AM IST

Updated : Sep 15, 2019, 3:29 PM IST

எம்டிபிசி கிரியேஷன்ஸ், எம்.டி. சுரேஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் காதல் அம்பு. இயக்குநர் பிரவின் இயக்க சன்னி டான் இசையில் ஸ்ரீனிவாச நாயுடு, பரத், ரேஷ்மா, கிரண், அஸ்வினி, மணீஷ் உள்ளிட்ட பல நடிகை, நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் இசை, ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது. இதில், இயக்குநர் பேரரசு, ஜூனியர் பாலையா, பி.ஆர்.ஓ. பெருந்துளசி பழனிவேல், பி.ஆர்.ஓ. விஜயமுரளி, ஆரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதனைத் தொடர்ந்து பேசிய நடிகர் ஆரி, "காதல் அம்பு படத்தில் நடித்த நடிகர்கள், இயக்குநர், தயாரிப்பாளர், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவரும் புதுமுகங்கள். இவர்களைப் போல் சினிமா மீது ஆர்வம்கொண்டவர்கள் இன்னும் நிறைய பேர் வர வேண்டும். மேலும் கடந்த சில நாட்களாக பிக்பாஸ் கவின் பற்றியே அனைவரும் பேசிவருகின்றனர்.

'தர்பார் படத்திற்கு பேனர்கள் வைக்க ரஜினி அனுமதிக்கக் கூடாது' - நடிகர் ஆரி

ஆனால் இதை விட முக்கியமாக நாம் பேச வேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது. அது சுபஸ்ரீயின் மரணம், யாருக்கோ வைத்த பேனர் இவரின் உயிரை வாங்கியுள்ளது. இதன் விளைவாக, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இனிமேல் எங்கள் கட்சி விழாவிற்கு பேனர் வைக்க மாட்டோம் என்று கூறியிருக்கிறார்.

இதேபோல் அரசியலில் மட்டுமல்லாமல், திரைப்படத் துறையிலும் பேனர் வைக்க அனுமதிக்கக் கூடாது. மேலும், நடிகர் ரஜினிகாந்த், அவர் நடித்த தர்பார் படத்திற்கு பேனர் வைக்கக் கூடாது எனக் கூறினால் நன்றாக இருக்கும்" எனத் தெரிவித்தார்.

Intro:தர்பார் படத்திற்கு கட்டவுட் வைக்க கூடாது- நடிகர் ஆரிBody:காதல் அம்பு படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடை பெற்று இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில்,

காதல் அம்பு படத்தில் நடித்தவர்கள், இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் என்று அனைவரும் புதுமுகங்கள். இவர்களைப் போல் இன்னும் நிறைய பேர் வரவேண்டும்.

இரண்டு மூன்று நாட்களாக, கவின் பிக் பாஸ்-ல் இருந்து வெளியேற்றப்பட்டார் என்று அந்நிகழ்ச்சியைப் பற்றியே அனைவரும் பேசுகின்றனர். ஆனால், இந்த விஷயங்களைத் தாண்டி நாம் பேச வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது. அது சுபஸ்ரீயின் மரணம் தான். யாருக்கோ வைத்த பேனர் அது காற்றடித்ததில், அவ்வழியாக சென்றுக் கொண்டிருந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் மீது விழுந்து, விபத்துக்குள்ளாக்கி இறந்துவிட்டார்.

இந்த விபத்திற்குப் பிறகு திமுக-வின் தலைவர் மு.க.ஸ்டாலின் இனிமேல் எங்கள் கட்சி விழாவிற்கு பேனர் வைக்கமாட்டோம் என்று கூறியிருக்கிறார். மக்களுக்கு நல்லது செய்யும் எந்த கட்சியாக இருந்தாலும் நான் ஆதரிப்பேன். அவர்களுக்கு ஓட்டுப் போடுவேன்.

அதேபோல், சினிமாத்துறை சார்ந்தவர்களும் பேனர் வைக்க மாட்டோம் என்று முடிவெடுக்க வேண்டும்.

Conclusion:ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவிருக்கும் ‘தர்பார்’ படத்திற்கு பேனர் வைக்கக்கூடாது என்று அவர் கூறினால் நன்றாக இருக்கும் என்றார்.
Last Updated : Sep 15, 2019, 3:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.