ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் படம் 'அண்ணாத்த'. 'சிறுத்தை' சிவா இயக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு, சதீஷ் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 'அண்ணாத்த' திரைப்படம் தீபாவளி வெளியீடாக நவம்பர் 4ஆம் தேதி வெளியாகிறது. தெலுங்கில் 'பெத்தண்ணா' என்ற பெயரிலும் ரிலீஸ் ஆகிறது.
-
Aaravaramai Akroshamai Anandhamai#AnnaattheTrailer:
— Sun Pictures (@sunpictures) October 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
▶ https://t.co/fsOTrObxcS@rajinikanth @directorsiva #Nayanthara @KeerthyOfficial @immancomposer @prakashraaj @IamJagguBhai @khushsundar #Meena @sooriofficial @AntonyLRuben @dhilipaction @vetrivisuals
">Aaravaramai Akroshamai Anandhamai#AnnaattheTrailer:
— Sun Pictures (@sunpictures) October 27, 2021
▶ https://t.co/fsOTrObxcS@rajinikanth @directorsiva #Nayanthara @KeerthyOfficial @immancomposer @prakashraaj @IamJagguBhai @khushsundar #Meena @sooriofficial @AntonyLRuben @dhilipaction @vetrivisualsAaravaramai Akroshamai Anandhamai#AnnaattheTrailer:
— Sun Pictures (@sunpictures) October 27, 2021
▶ https://t.co/fsOTrObxcS@rajinikanth @directorsiva #Nayanthara @KeerthyOfficial @immancomposer @prakashraaj @IamJagguBhai @khushsundar #Meena @sooriofficial @AntonyLRuben @dhilipaction @vetrivisuals
இப்படத்தின் போஸ்டர்கள், பாடல்கள், டீஸர்கள் ஆகியவை வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது. இந்நிலையில், இன்று (அக்.27) 'அண்ணாத்த' படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
ட்ரெய்லரில் ரஜினி, வேட்டி சட்டை, முறுக்கு மீசை, என மாஸா ஸ்டைலாக தோன்றியுள்ளார். இதைக் கொண்டாடும் விதமாக ரஜினி ரசிகர்கள் சமூகவலைதளத்தில் '#AnnaattheTrailer' என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பாசத்துடன் வெளியான 'மருதாணி': 'அண்ணாத்த' மூன்றாவது பாடல் வெளியீடு