இதன் பின்னர் இமயமலைக்கு ஒரு வார ஆன்மீக பயணமாக புறப்பட்டார். முதலில் ரிஷிகேஷ் சென்ற அவர் அங்கிருந்த தயானந்த ஆசிரமத்தில் தியானம் மேற்கொண்டார். பின்னர் அங்கிருந்து பத்ரிநாத், கேதர்நாத் ஆகிய இடங்களுக்கு சென்று அங்குள்ள கோயில்களில் வழிபட்டார்.
மேலும், கடந்தாண்டு தான் கட்டிய பாலாஜி குகைக்கு சென்று தியானம் மேற்கொண்டதுடன், பாபா குகையில் தியானம் மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
ஆன்மீக பயணத்தை முடித்து விமானம் மூலம் சென்னைக்கு திரும்பிய ரஜினியை ரசிகர்களும், பத்திரிகையாளர்களும் சூழ்ந்து கொண்டனர். அவரைச் சுற்றி நான்குபுறங்களிலும் நின்று கொண்ட ரசிகர்கள் விடியோ, செஃல்பி புகைப்படங்கள் எடுத்தனர்.
இதனிடையே பத்திரிகையாளர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்த நிலையில், இமயமலை பயணம் நன்றாக இருந்ததாக கூறிவிட்டு, வேறு பதில் எதுவும் கூறாமல் அங்கிருந்து சிரித்தவாறே புறப்பட்டுச் சென்றார்.