ETV Bharat / sitara

புதிய படத்திற்காக தலைகீழாக தொங்கும் ரைசா வில்சன் - ரைசா வில்சன்

ரைசா வில்சன் நடிப்பில் உருவாகியுள்ள 'The chase' படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது.

தி சேஸ்
தி சேஸ்
author img

By

Published : Sep 1, 2020, 7:10 PM IST

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானவர் நடிகை ரைசா வில்சன். அதன்பின் அவர் நடிப்பில் வெளியான 'பியார் பிரேமா காதல்' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதைத்தொடர்ந்து சில படங்களில் நடித்து வரும் ரைசா, அடுத்ததாக இயக்குநர் கார்த்திக் ராஜூ இயக்கியுள்ள படத்தில் நடித்துள்ளார். த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தை ராஜ்சேகர் வர்மா தயாரித்துள்ளார்.

எமோஷனலான த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் நடத்தப்பட்டது. இப்படத்தின் போது எடுக்கப்பட்ட ரைசாவின் புகைப்படம் சமூக வலைதளத்தில் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டுள்ளார். 'The chase' என பெயரிடப்பட்ட போஸ்டரில் ரைசா வில்சன் தலைகீழாக கட்டி தொங்கவிட்டது போல் காட்சியளிக்கிறார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.