ராகவா லாரன்ஸ் பாலிவுட்டில் 'லட்சுமி பாம்' படத்தை இயக்கி வருகிறார். அக்ஷய் குமார், கியார அத்வானி நடித்துவரும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது. இதற்கிடையில் லாரன்ஸின் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் புதிய படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொல்லாதவன், ஜிகர்தண்டா, ஆடுகளம் போன்ற படங்களை தயாரித்த 5 ஸ்டார் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளது.
மேலும் விரைவில் படத்தின் இயக்குநர், படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள், தொழிநுட்ப கலைஞர்கள் குறித்த தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதவிர ஜி.வி. பிரகாஷ் காதலிக்க யாருமில்லை, ட்ராப் சிட்டி போன்ற படங்களில் நாயகனாகவும், தலைவி படத்தில் இசையமைப்பாளராகவும் பணியாற்றிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: உடல்நலம் பாதிக்கப்பட்ட நகைச்சுவை நடிகரை நேரில் சந்தித்த விஜய் சேதுபதி!