ETV Bharat / sitara

அவமானப்படுத்தப்பட்ட லாரன்ஸ்; காஞ்சனா இந்தி ரீமேக்கில் இருந்து விலகல்

author img

By

Published : May 19, 2019, 12:19 PM IST

காஞ்சனா படத்தின் இந்தி ரீமேக்கில் இருந்து விலகுவதை ராகவா லாரன்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

laxmmi bomb

2011ஆம் ஆண்டு லாரன்ஸ் இயக்கத்தில் வெளியாகி செம ஹிட்டடித்த படம் ‘காஞ்சனா’. இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய முடிவு செய்தார் லாரன்ஸ், லஷ்மி பாம் என பெயரிடப்பட்டது. அக்‌ஷய் குமார், கியாரா அத்வானி ஆகியோர் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடிப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் லாரன்ஸ் இந்தப் படத்தில் இருந்து விலகியிருக்கிறார்.

laxmmi bomb
கியாரா அத்வானி

இது குறித்து அவர், 'மதியாதோர் தலைவாசல் மிதியாதே என ஒரு பழமொழி உண்டு. பணத்தை விட சுயமரியாதை என்பது ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியம். அதனால் காஞ்சனா இந்தி ரீமேக்கில் இருந்து நான் விலகிக்கொள்கிறேன். இந்தப் படத்தை விட்டு விலக நிறைய காரணங்கள் இருக்கிறது. அவற்றை எல்லாம் நான் குறிப்பிட விரும்பவில்லை.

என்னிடம் ஆலோசனை எதுவும் கேட்காமல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதை மற்றவர்கள் சொல்லி நான் தெரிந்துகொண்டது மிகவும் வேதனையாக உள்ளது. அதனால் இந்தப் படத்தை நான் இயக்கப்போவதில்லை.

laxmmi bomb
லஷ்மி பாம்

எந்தவித ஒப்பந்தத்திலும் கையெழுத்து இடாததால், படத்தின் ஸ்கிரிப்டை நான் தர மறுக்கலாம். ஆனால், அக்‌ஷய் குமார் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. அதனால் படத்தின் ஸ்கிரிப்டை நான் கொடுக்கலாம் என முடிவு செய்துள்ளேன்.

எனக்கு பதிலாக வேறு இயக்குநரை வைத்து இயக்கிக்கொள்ளட்டும். விரைவில் அக்‌ஷய் குமாரை சந்தித்து ஸ்கிரிப்டை ஒப்படைக்க முடிவு செய்துள்ளேன். அந்த படக்குழுவினர் வெற்றிபெற என்னுடைய வாழ்த்துகள்' என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.