தமிழில் விஷன் 3 கிளோபல் தயாரிப்பில் சர்வதேச விருதுகளை வென்ற படம் ‘ரேடியோ பெட்டி’. இந்த படத்தை இயக்குநர் ஹரி விஸ்வநாத் இயக்கியிருந்தார். இந்த படத்தை தொடர்ந்து பாலிவுட்டில் 'பன்சூரி' என்னும் படத்தை இயக்கி அங்கு தடம் பதித்துள்ளார்.
இந்தபடத்தில், 8 வயது சிறுவன் தன்னில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்துக் கொண்டு அதுவாகவே மாற நினைக்கிறான். அந்த பெருமுயற்சியின் காரணமாக அவனது வாழ்க்கை பயணத்தில் அவன் சந்திக்கும் வெற்றி-தோல்விகள், மகிழ்வுகள்-இகழ்வுகள், அவனை எப்படி புடம் போடுகின்றன. இறுதியில் அவன் இலக்கை அடைந்தானா இல்லையா என்பதை பல்வேறு சுவராஸ்யங்களுடனும், எதிர்பாராத திருப்பங்களுடனும் புதிய பரிமாணத்தில் சொல்லும் வகையில் அமைந்துள்ளது.
இப்படத்தில் அனுராக் காஷ்யப், ரிதுபர்னா சென்குப்தா, அங்கன் மாலிக் முன்னணி வேடங்களில் நடிக்க, அவர்களோடு இணைந்து உபேந்திர லிமாயி, மசூத் அக்தர், டேனிஷ் ஹுசைன், மேஹெர் மிஸ்திரி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்துக்கு போலந்து நாட்டைச் சேர்ந்த ஸெகொர்ஸ் ஹார்ட்ஃபீல் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்ய அனுபம் பேனர்ஜி பாடல் வரிகளுக்கு தெப்ஜ்யோதி மிஸ்ரா இசையமைக்கிறார். தற்போது இந்த அனைத்து பணிகளும் நிறைவடைந்து உலகளாவிய வெளியீட்டுக்கு 'பன்சூரி' தயாராகி வருகிறது.
இதையும் படிங்க: பயோபிக்கைத் தொடர்ந்து மோடியின் இணைய தொடருக்கும் தடை!